‘காரை மண் ஒரு சிறந்த கல்விமானை இழந்துவிட்டது”
யாழ்ரன் கல்லூரி முன்னாள் அதிபர்
மார்க்கண்டு வைத்தியநாதன்
அவர்களின் இறுதி யாத்திரையில் ‘காரை ஒளி” ஆசிரியர் ஐ.தி சம்பந்தன்; ஆற்றிய
இரங்கல் உரை…….

அமரர் மார்க்கண்டு வைத்தியநாதன் அவர்கள் மலேசியாவில் பிறந்தவர். இந்தியாவில் எம்.எஸ்.சி. பட்டம்பெற்று காரைநகர் இந்துக்கல்லூரியில் தமது ஆசிரியப்பணியை ஆரம்பித்தவர். பின்னர் தொடர்ந்து புங்குடுதீவு மகாவித்தியாலயம், உரும்பிராய் இந்துக்கல்லூரி (உப-அதிபர்), காரைநகர் யாழ்ரன்; கல்லூரியில் அதிபராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
நீண்டகாலம் நிறைவான கல்விப் பணியாற்றி காரைநகருக்கு பெருமை பெற்று
தந்த ஒரு சிறந்த கல்விமான். அன்னர்; தமது 89வது வயதில் இலண்டனில் சிவபதம் எய்தினார். அவரது மறைவால் காரை மண் ஒரு புனிதமான பெருமை தரக்கூடிய கல்விமானை இழந்துவிட்டது.
சிறந்த ஆசிரியராக, ஒழுக்க சீலராக, தன்னலமற்ற சேவையாளராக, அமைதி,
அடக்கம், ஆன்;மீகநெறி ஆகிய அரும்ெரும் குணாதிசயங்களைக் கொண்டவராக காரைநகருக்குப் பெருமை தேடித் தந்த பெருமகன்.
மாணவர்களுக்கு கல்வியூட்டும் ஆற்றல் மிக்க வைத்தியநாதன் மாஸ்டரிடம் காரைநகர் இந்துக்கல்லூரியில் இரண்டாண்டுகள் நான் கல்வி கற்றபோது அவரது ஆசிரியத் திறனை அறியக் கூடியதாகவிருந்தது. அவரது கல்வியூட்டலால் பயனடைந்த மாணவர்கள் பலர் இன்று உயர்ந்த பதவிகளில் உள்ளனர். தாம் பணியாற்றிய கல்லூ
ரிகளின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி உயர்வுக்காகவும் அவர் ஆற்றிய சேவை காரைமக்கள் மனங்களில் என்றும் நிறைந்திருக்கும் .
ஒரு இலட்சியவாதியாக பிரமச்சரிய வாழ்வை மேற்கொண்டு பல கஸ்டப்பட்டமக்களுக்கு அன்னார் ஆற்றிய சேவை போற்றுதற்குரியது.
சைவமும் தமிழும் வளர்த்த காரைநகர் சைவாசார சீலர்களையும் ஆத்மீக நெறியாளர்களையும் வளர்த்தெடுத்த பூமி. காரைநகர் பேப்பர் சுவாாமி, யோகர் சுவாமி ஆகிய ஆன்மீக ஞானிகளின் தொடர்பால் அமரர் மார்கண்டு வைத்தியநாதன் அவர்கள் ஆன்;மீகத்தில் ஆழமாகத் தன்னை அற்பணித்துக் கொண்டவர்.
ஒரு சமயத்தில் யோகர் சுவாமியைச் அன்னார் சந்தித்தபோழுது “நான் என்ன செய்யவேண்டும் எனக்கேட்டார்” யோகர் சுவாமிகள் அப்போது கூறியதாவது – “ நீ என்னைப் பின்தொடர்” என்றாராம். அதன் பின் தன் உடையையும் தோற்றத்தையும் யோகர் சுவாமி போல் மாற்றிக்கொண்ட குரு பக்தன் இவர். அன்னார் மறையும்
வரை ஒரு முனிவர் போலவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். பெயர் புகழ் விரும்பாத பெருந்தன்மை கொண்ட இவர் தமது 89வது வயதில் இறைவனடி எய்தினார்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
என்ற வாக்கிற்கமைய அன்னார் இவைன் நிழலடிசேர ஈழத்துச் சிதம்பரத்தானைப் பிரார்த்திப்போமாக.