‘சுவிஸ் நாதன்” என அழைக்கப்படும் திரு.கதிர்காமநாதன் சுப்பிரமணியம் அவர்களின் மனிதாபிமான செயற்கரிய செயற்பாடுகள் மூலம் காரை மண் பெருமை கொள்கின்றது. கல்விப்பணி, ஆன்மீகபணி, சமுதாயபணிகளுடன் வைத்தியசுகாதார பணிகளையும் ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு நிதியுதவிகளையளித்து வருகின்றார்.








இந்த வாரம் கிளிநொச்சி சுகாதார வைத்தியசாலைக்கு ஐந்து கோடிக்கு மேற்பட்ட நிதியுதவி வழங்கி அவசர சிகிச்சைப்பிரிவிற்கான கட்டிடப்பணிகளை ஆரம்பித்து வைத்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை போன்றவற்றிற்கும் கோடிகளாக அள்ளி வழங்கி சுகாதார பணியிலும் நாடு போற்றும் பணியில் ஈடுபட்டு காரை மண்ணிற்கு பெருமை சேர்த்து வருகின்றார்.