சுப்பிரமணிய வித்தியாசாலையின் வரலாற்று நோக்கு – S.K.சதாசிவம்

சைவ மாணவர்கள் கல்வி கற்பதற்கு சைவ சமயத்தைக் கைவிட வேண்டிய காலகட்டத்தில் சைவ மாணவர்களின் கல்வியையும் சமயத்தையும் வளர்ப்பதற்கு காரைநகரில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரியமிக்க சைவத்தமிழ்ப் பாடசாலை சுப்பிரமணியம் வித்தியாசாலையாகும்.

காரை மருதடி விநாயகர் ஆலய அயலிலே 1879ம் ஆண்டிலே திரு.நமசிவாயம் என்பவர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப்பள்ளிக்கூடம் ஸ்ரீமான் சுப்பிரமணியபிள்ளை அவர்களின் முயற்சியினால் தமக்குள்ள நிலப்பரப்பில் மிக்க வசதியான குட்டிப்புலத்திற் பாடசாலையொன்
றை 1889ம் ஆண்டு ஆரம்பித்தார். அக்காலத்தில் வாழ்ந்த கல்வியில் ஈடுபாடு கொண்ட அபிமானிகளாக பாடசாலையை ஸ்தாபிப்பதற்கு உதவியோருள் எடுத்துச் சொல்லப்படத்தக்கவர்கள் காரை ச.அருணாசல
உபாத்தியாயர், வேதக்குட்டிஐயர், கா.சிவசிதம்பரஐயர், சி.சங்கரப்பிள்ளை, ச.கணபதிப்பிள்ளை, ஆ.அம்பலவாணர், மு.குமாரவேற்பிள்ளை ஆவார்கள்.

இங்ஙனம் ஆரம்பிக்கப்பட்ட சுப்பிரமணிய வித்தியாசாலையிலே முதல் ஆசிரியராக நியமனம் பெற்றவர் யாழ்ப்பாணத்தில் இக்காலத்தில் சைவ
ஆசிரியர்கள் பலர் மிளிரும்படி தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகஞ் செய்துழைத்தவரான காரை ச.அருணாசல உபாத்தியாயர் அவர்களே. இயற்றமிழ்ப் போதகாசிரியரும் வித்துவானுமாகிய
திரு த.நாகமுத்துப்பிள்ளை அவர்களும் திரு.க.முருகேசு அவர்களும் ஆசிரியராக நியமிக்கப்பட்டனர்.

இவ்வித்தியாலயத்திற்குரிய நிலம், கட்டிடம், உபகரணங்கள், உபாத்தியாயர் வேதனம் என்பவற்றை அரசாட்சியாரின் வித்தியாசகாயப்பணம் கிடைக்கும் வரை பத்துவருடகாலம் ஸ்தாபகர் தாமே வழங்கி நடத்திய
வள்ளலாவர். இவர் இவ்வித்தியாலயத்தை தாம் செய்து வைத்த கட்டுப்பாடுகளுக்கு அமைய பொது ஸ்தாபனமாக கருதுமாறு வழங்கிய பெருந்தன்மை என்றும் பாராட்டுக்குரியது.

1900ம் ஆண்டளவில் மானிப்பாய் வாசியும் சைவபாடசாலைகளின் மனேஜருமாய் விளங்கிய ஸ்ரீமான் எஸ்.கே.கனகரத்தினம் அவர்கள் மனேஜராகவும், காரைநகர் மேற்கு பயிற்றப்பட்ட தராதரம் பெற்ற ஆசிரியர் திரு.
சி.தில்லையம்பலம் அவர்கள் தலைமை ஆசிரியராகவும் நியமனம் பெற்றனர். ஐந்தாம் ஆண்டுவரை கற்பிக்கப்படும் பிரதான ஆண்கள் பாடசாலையாக அரசினர் உதவும் நன்கொடை பெற்று வளர்வதாயிற்று.

1917ம் ஆண்டு பிரம்பஸ்ரீ ச.பஞ்சாட்சரக்குருக்கள் தலைமை ஆசானாகவும், சித்தன்கேணி நொத்தாரிசு க.அருணாசலம் அவர்கள் 1920ல் மனேஜருமாக நியமிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் பாடசாலையில் உயர்தர வகுப்புக்
கள் நடாத்த முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மலாயநாட்டில் சிறந்த உத்தியோகத்தவரும் பரோபகாரியுமாகிய காரைநகர் ஸ்ரீமான் க.சுப்பிரமணியம் அவர்கள் தாமும் முயன்று உதவி புரிவதாக முன்வந்து
பொருள் சேர்த்து 1922ம் ஆண்டு தற்போதைய பிரதான மண்டபம் அமைக்கப்படுவதற்கு முன் பாடசாலையின் பிரதான மண்டபமாக பாவிக்கப்பட்ட
மண்டபம்அமைக்கப்பட்டது. 1923ல் ஸ்ரீமான் க.சுப்பிரமணியம் மனேஜருமாக நியமிக்கப்பட்டார். இக்காலகட்டத்தில் 6ம் வகுப்பு முதல் மேல் வகுப்புக்
கள் அமைந்த பாடசாலையாகவும் 200 பிள்ளைகளுடன் ஏழு, எட்டு ஆசிரியர்கள் கற்பிப்பதுமாக சிறந்து விளங்கியது. மாணவர் கலாவிருத்திச் சங்க கூட்டங்கள், வருடாந்த விழாக்கள் முதலியன எல்லாம் நடைபெறத் தொடங்கின. 1939ம் ஆண்டு சித்திரை மாதம் நடைபெற்ற பொன்விழா வாழ்த்துப்பாவில் பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சரக்குருக்கள் குறிப்பிடுகையில்:

“ஒப்பில் பெருமைச் சுப்பிரமணியம் அதிபதியாகி நிதிமிகச் சேர்த்துப் பெரிய மண்டப மதைக் கருதியமைத்தே
எட்டியாண் டெல்லை திட்பமாய்ப் பேணல் பெருமையில் உயர்ந்து மருவிய தன்றே” எனப்பாடியுள்ளார்.

1930ம் ஆண்டு முதல் காரைநகர் மேற்கு ஸ்ரீமான் க.செல்லப்பாபிள்ளை அவர்கள் 3வருடமும், காரைநகர் கிழக்கு கிராமசங்கத்தலைவர் ஸ்ரீமான் ச.கணபதிப்பிள்ளை 2வருடமும் மனேஜர்களாக நியமனம் பெற்று பாடசாலை
வளர்ச்சிக்கு பணியாற்றி சிறப்புற நிர்வகித்தனர்.

1920ம் ஆண்டின் மேல் பதினாறு ஆண்டுகள் வித்தியாசாலையின் வளர்ச்சிகாரமாக உயர்தர வகுப்புக்கள் கற்பதற்கு கிராமத்திற்கு வெளியே செல்
ல வேண்டும் என்ற நிலைமாறியது. இக்காலத்தில் ஏனைய சைவப் பாடசாலைகளும் வளர்ச்சி அடைந்தன. மிஷனரி பாடசாலைகளில் உயர் தர வகுப்பு கல்வி நடைபெறத் தொடங்கிய காலகட்டம் இதுவாகும். 1935ம் ஆண்டு ஸ்தாபகரின் புதல்வர் ஸ்ரீமான் சி.சு.கந்தப்பு மனேஜராக
நியமனம் பெற்றார். இவர் காலத்தில் ஸ்தாபகரின் கல்விப்பணிக்கு உரமூட்டும் வகையில் பாடசாலையின் கிழக்கு பாகத்தில் உள்ள கட்டடிடம்,முகப்புக் கட்டிடம், மதிற்சுவர் என்பன கட்டப்பட்டன. இக்காலப்பகுதியில்
10ம் வகுப்புவரை நடைபெற்று(ளு.ளு.ஊ) பரீட்சை பெறுபேறுகளின் படி 4: 3 பேர் சித்திபெற்றுள்ளனர். இவ்வித்தியாலய மாணவர்கள் அரசாங்க தொழில் வாய்ப்பு பெற்றும், வெளிநாடுகளுக்குச் சென்றும், சமுதாயத்தில்
மேனிலை அடைந்து விளங்கினர்.

1939ம் ஆண்டு சித்திரை மாதம் நடைபெற்ற பொன்விழா கொண்டாட்டத்திற்கு இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகராக விளங்கிய சேர்.வைத்தியலிங்கம் துரைசுவாமி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். 1945ம் ஆண்டு வரைக்கும் வித்தியாசாலையின் உயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பல ஆசிரியப் பெருமக்கள் தொண்டாற்றி உள்ளனர். திரு.சி.தில்லையம்பலம் தலைமை ஆசிரியராக 17 ஆண்டுகளும், பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சரக்குருக்கள் 28 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகவும், காரை திரு.ச.அருணாசலம், ஸ்ரீமான் சி.சுப்பிரமணியதேசிகர், பண்டிதமணி சு.அருளம்பலவாணர் ஆகியோர் ஆசிரியராகவும் கடமையாற்றினர். வித்துவான் த. நாகமுத்துப்புலவர் 35 வருடங்கள் ஆசிரியராக கல்வி விருத்தியையும், பாடசாலை அபிவிருத்தியையும் நாடி உழைத்தவராவர்.

பிரம்மஸ்ரீ ச.பஞ்சாட்சரக்குருக்கள் 1945ல் ;இளைப்பாற ஸ்தாபகரின் பேரன் திரு.சு.க.அரளம்பலம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு 1968ம் ஆண்டு வரை 23 ஆண்டுகள் வித்தியாசாலையின் பழமையையும்
பெருமையையும் பேணிப்பாதுகாத்து கல்விப் பணியாற்றினார். இக்காலத்தில் திரு.அ.காசிநாதன், திரு.சி.சண்முகம், திரு.வெ.ஐயம்பிள்ளை, திருமதி ஐயம்
பிள்ளை, திரு.அ.இராசசிங்கம், திருமதி இ.கனகசுந்தரம் ஆகியோர் நீண்ட காலம் கல்விப்பணியாற்றியது மட்டுமன்றி மாணவர்களின் சமய வளர்ச்சி ஒழுக்கம் என்பவற்றிலும் அக்கறை செலுத்தினர்.

1968ம் ஆண்டு திரு.சு.க.அருளம்பலம் இளைப்பாற திரு.அ.சுப்பிரமணியம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு 1972ம் ஆண்டு நடுப்பகுதிவரை
கடமையாற்றினார். 1969ம் ஆண்டில் தற்போது அமைந்துள்ள பிரதான கட்டிடம் ஸ்தாபகரின் உறவினர்களான திரு.கே.கே.நடராசா, திரு.கு.இராசையா
ஆகியோரின் முயற்சியியால் அமைக்கப்பட்டது. புதுயுகத்தின் கல்விச்சவால்களை எதிர்கொள்ள வேண்டிய பௌதிக தேவைகள் இக்கட்டிடம் அமைக்கப்பட்டதன் மூலம் நிறைவு செய்யப்பட்டன.

80 ஆண்டுகள் தனித்துவமாக அதிபரின் தலைமையில் இயங்கிய சுப்பிரமணிய வித்தியாசாலை 1971ம் ஆண்டில் காரைநகர் இந்துக்கல்லூரியின் கனிஷ்ட பிரிவாக இணைக்கப்பட்டு இந்துக் கல்லூரியின் நிர்வாகத்
தின் கீழ் இயங்க ஆரம்பித்தது.

1972 நடுப்பகுதியில் இருந்து திரு.க.தில்லையம்பலம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு 76ம் ஆண்டு வரை கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் 130 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் இவ்வித்
தியாலயத்தின் கல்விப்பணி சிறப்புற நடைபெற்றது. பெற்றோர் தினவிழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 1977ம் ஆண்டு திருமதி அ. வேலுப்பிள்ளை தலைமையாசிரியராக கடமையாற்றினார். 1978 முதல்
1984 வரை திரு.க.இராசா தலைமையாசிரியராக கடமையாற்றினார்.

1985ம் ஆண்டு காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய திரு.ச.பத்மநாதன் அவர்களின் துணிச்சலான தீர்க்கமான நிர்வாக நடவடிக்
கையால் திரு.ஆ.பாலகிருஷ்ணன் அதிபராக நியமிக்கப்பட்டார். 1887ம் ஆண்டு 110 மாணவர்களுடனும் 5 ஆசிரியர்களுடனும் வித்தியாலயம் வளர்ச்சிப்பாதையில் காலடி எடுத்து வைத்தது. இக்காலகட்டத்தில் இரு
மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைபரீட்சையில் சித்தி எய்தினர். இக்காலகட்டத்தில் பெற்றோரின் உதவியுடன் பிரதான மண்டபம் வகுப்பு அறைகளாக பிரிக்கப்பட்டும், அதிபர் அலுவலக வேலைகள் நீர்வசதி என்பனவும் மேற்
கொள்ளப்பட்டது. 27 மாணவர்களுடனும் ஓர் அதிபர், ஓர் ஆசிரியருடனும் இயங்கிய இவ்வித்தியாலயம் மூடப்படுமா? என்ற அச்சநிலைக்கு தள்ளப்பட்ட வேளை வேதனையடைந்த அபிமானிகள் வளச்சி கண்டு பூரிப்புற்றனர். காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராகவும், கொத்தணி அதிபராகவும் கடமையாற்றிய திரு.மு.திருநீலகண்டசிவம் வித்தியாலய ஆசிரிய
தேவைகளையும் ஏனைய தேவைகளையும் நிறைவு செய்து வித்தியாலய வளர்சியில் அக்கறை செலுத்தினார்.

1991ம் ஆண்டு எமது கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றபின் எமதுகிராமத்தில் தங்கியிருந்த மக்களின் கல்விப்பணிக்காக இவ்வித்தியாயலம் காரைநகர் மகாவித்தியாலயம் என்ற புதிய நாமத்துடன்
திருமதி.சிவயோகம் விஜயரத்தினம் தலைமையில் இயங்கியது. 100 மாணவர்களுடனும், 5 ஆசிரியர்களுடனும் கா.பொ.த சாதாரண வகுப்புவரை நடைபெற்றது. எமது கிராமத்தை இருள் கவ்வியயவேளை கல்விக்
கு ஒரு கலங்கரை விளக்கமாக நின்று கிராமத்தின் கல்விப் பராம்பரியத்தை பேணிப்பாதுகாத்தது. இடம்பெயர்ந்த வேளையில் யாழ்ப்பாணத்திலும் யா.கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் கனிஷ்டபிரிவு திரு.ஆ. பலராமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

1996ம் ஆண்டு மீண்டும் மீளக்குடியமர்ந்தவுடன் திரு.ஆ.பலராமன் அவர்களின் தலைமையில் வித்தியாலயத்தின் கனிஷ்டபிரிவு இயங்கத் தொடங்
கியது. திரு.ஆ.பலராமன் ஆசிரியர் ஆலோசகராக பதவி உயர்வு பெற்றுச் செல்ல அம்பலவாணர் இராசசிங்கம் ஆசிரியரின் மகள் சுபத்திராதேவி இப்பாடசாலையின் தலைமை பொறுப்பை ஏற்று நடாத்தி வந்தார். 2004ல் 5ம்
தர புலமைப்பரிச்சையில் இருமாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர். புலமைப் பரிசில் பெறுவதற்கான வெட்டுப்புள்ளிக்கும் 100 புள்ளிக்கும் இடையில் 8
மாணவர்கள் உயர்புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது கல்வியின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது. இப்பெறுபேற்றில் இவ்வித்
தியாலயம் தீவக வலயத்தில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டது. இக்காலப் பகுதியில் ஆ.தியாகராஜா ம.ம.வித்தியாலயத்தில் அதிபராகவும் சுப்பிரமணிய வித்தியாசாலையின் பழைய மாணவருமான பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்கள் கூடிய கவனம் செலுத்தி புனரமைத்துக் கொடுத்தார்.

இவ்வித்தியாலத்தின் முகப்பு இடிந்து விழும் நிைலையில் இருந்த போது போரூட் நிறுவத்தின் உதவியுடனும், இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தின் உதவியுடன் மற்றைய கட்டிடப்பணிகளை புனரமைத்தும் செய்துள்
ளார். ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபரின் நிதி உதவி பெற்று ஆசிரியர்களுக்கு மலசலகூடமும் போரூட் நிறுவனத்தின் உதவியுடன் மாணவ மாணவிகளுக்கு தனியாக சலகூடமும், தரம் 1, தரம் 2, தரம் 3
ஆகிய வகுப்பறைகளை நவீன கற்றல் முறைக்கேற்ப அறைகளாக மாற்றியும் உபகரண வசதிகளையும் கல்வித் திணைக்களத்தின் நிதி உதவியுடன் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கடந்த சில வருடங்களாக இவ்வித்தியாலயத்தின் விளையாட்டுப் போட்டிகள் இந்த வித்தியாலய முன் மைதானத்தில் தனித்துவமாக நடாத்தப்பட்
டு வருகின்றமை போற்றுதற்குரியதாகும். இதனால் மாணவரினதும் ஆசிரியரினதும் தலைமைப் பண்பை விருத்தி செய்யக்கூடியதாக இருந்துள்ளது. கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று 125க்கு மேற்பட்ட மாணவர்களும் 5 ஆசிரியர்களும் கற்பித்து வருகின்றார்கள்.

1879ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுப்பிரமணியம் வித்தியாசாலை, 1971ம் ஆண்டு காரைநகர் இந்துக் கல்லூரியின் கனிஷ்ட பிரிவு பாடசாலையாக இணைத்துக் கொள்ளப்பட்டு 40 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தனித்
துவமாக தனியான நிர்வாகத்தின் கீழ் இயங்க கல்விச்சபை தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் 01.01.2012 அன்று உத்தியோகபூர்வமாகவும் 06.01.2012 சம்பிரதாயபூர்வமாகவும் ‘சுப்பிரமணியம் வித்தியாசாலை’ என்ற பெயருடன் மீளவும் கல்விப் பணியில் கால்பதித்துள்ளது.

தீசன் திரவியநாதன்

'எனது ஊர் காரைநகர்"
கனடாவில் வெளியாகும் காலாண்டு
சஞ்சிகை உங்கள் வீட்டிற்கும்
இலவசமாக வந்தடையும். எதுவித
தயக்கமும்இன்றி உடனடியாக
அழையுங்கள்
416 821 8390

உங்கள் விலாசம் அல்லது
தொலைபேசி இலக்கத்தை
மின்அஞ்சலில் அனுப்பவும்.
உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
theesan@karainews.com
நன்றி!

More From Author

சுப்பிரமணியம் வித்தியாசாலை ஸ்தாபகர் ஸ்ரீமான் சி.சுப்பிரமணியபிள்ளை

காரை மண் பெருமை கொள்ளும் கொடைவள்ளல் “சுவிஸ் நாதன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *