சேவையால் உயர்ந்தார் சிந்தையில் அமர்ந்தார்
சிந்தனையும் உழைப்பும் செயலிலே தந்தார்
கற்றவரும் மற்றவரும் வியப்படைய கடமையே கண்ணாக
காரை மண் உயர கண்ணியமாய் பணிபுரிந்தார்.
‘கற்க கசடற கற்க கற்றவை கற்ற பின்
நிற்க அதற்கு தக’
கற்ற கல்விக்கு பயன் தந்தார்
காரை மண்ணில் பணி புரிந்தார்,
மக்களிற்கு துணை நின்றார்,
மகேஸ்வரனை வணங்கி நின்றார்
தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை சேர்த்தார்
காரை மண் வளமாக்க எங்கள் ஐயன் துணை நின்று
சௌந்தராம்பிகை உடனுறையும் மகேஸ்வரனும் வரவேற்க
பணிபுரிய வந்தவரை மகிழ்வோடு அனுப்புகின்றோம்,
மற்றவரும் பயனடைய
ஈழத்து சிதம்பரத்தான் துணைநிற்க செய்த பணி
அத்தனையும் சிந்தையிலே நாம் இருத்தி
சென்றுவர வழியனுப்பி,
பின் தெரியாமல் தேம்புகின்றோம்.
காரை மண் சிறப்படைய ஐந்தாறு வருடமாக கடல் கடந்து
ஆர்வமுடன் பணிபுரிய காரை மண் வந்தவரே
வேலையில்லா வேளையிலும் விடுமுறையிலும்
விரும்பி வந்தவரே
காலை மாலை கவலையின்றி களிப்புடனே
கலைவளர்க வந்தவரே
ஜெயசீலன் பெயர் கொண்டாய், வெற்றியை உனதாக்கி
சீரிய நெறியுடன் சிறப்புடனே வாழ்வதற்கு பணிசெய்யும்
தொழில் கொண்டாய்
நீ வாழி, உன் குடும்பம் வாழி, உன் பணி வாழி,
உன் ஊர் வாழி,
நீர் கொண்ட பற்று வாழி, எம் நகர் வாழி,
எம் நாடு வாழி, வாழியவே!
‘எனது ஊர் காரைநகர்’