ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு!
-சுப்பிரமணிய பாரதி
நேரில் கண்டு அனுபவித்த விடயங்கள் பற்றிய கட்டுரை இது. புனிதமான செயல்கள்.
எத்தகையவை – வயது, குலம், குறிச்சி எனும் குறுகிய எல்லைகளை மீறிய செயல்கள்எவ்வாறு – ஒன்று சேர்ந்து ஏன் – சிறுசிறு செயல்கள் ஊடாய் நீண்ட கால விளைவுகளை நோக்கி எங்கே – காரைநகர் வடக்கில் புனிதமான செயல்கள் என்றேன், புதைந்து இருந்த மண் அபிமானம் சாதனைகளாக பரிணமிக்கத்தொடங்கின. இதுவே ஆன்மீகம். ‘நான்” எனச் செய்விக்கும் ஆணவத்தோடு நடாத்தும் போராட்டம் ஆரம்பிக்கின்றது. இயல்புக்கு முரணான எதிர் நீச்சல்.
மேற்கிலுள்ள மடத்தடிக் கேணி சேர்ந்து இறைக்கப் படுகின்றது. பட்டு மாமா நடாத்தும் நல்லியக்கச் சபை தீவிரம் அடைகின்றது.(இதற்கு முன்னர் பல பெரியவர்கள் தோன்றி கிராம மக்களை நெறிப்படுத்த
முயன்றிருக்கின்றார்கள்).
1970ம் ஆண்டு தியாகர் பிறின்சி பதவியிலிருந்து ஓய்வு பெறும் வேளை முழுக்கிராமமுமே ஒன்று திரண்டு
ஊர்வலாமாக அழைத்துச் சென்று நன்றி தெரிவித்திருந்தது. அதன் பின்னர் பாராளுமன்றப் பிரதிநிதியாகவும் தெரிவு செய்தது.
இத்தகைய புனிதமான செயல்களை குறிப்பிட்ட பின்னரே வேதரடைப்பு கிராம அபிவிருத்தி சங்கத்தின்
சாதனைகளையும் குறிப்பிட விரும்புகின்றேன். இதற்கிடையில், வேறொரு போக்குக்கு எதிராக நடைபெற
வேண்டிய அவசியத்தையும் கூறவேண்டி இருக்கிறது. மற்றவர்களை குறை காண்பது.
‘உலகம் கெட்டுப் போச்சு” – (என்னைத் தவிர) என்னைத் தவிர என்பதை உணர்வேனாகில் நான்
உலகம் கெட்டுப் போச்சு என்று சொல்லவே மாட்டேன். எல்லோரும் இவ்விதமாகக் குறை கூற
முற்பட்டால், நான் சொன்னது போலாகிவிடும். ஒரு வகை சாமியார்க்குணம் எனக்கே நான்
சூட்டிக்கொள்ளும் ‘பேப்பட்டம்”,(அப்போ நீர் கீேழு அவிட்டுவிடும் பட்டங்கள் பதவிகள் கதி என்னவாகும்?
அட பேயா – நான் எனக்கு சூட்டியவை அல்ல. என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். ஆளையாள்
பேப்பட்டஞ் செய்யும் சமூகத்தில் இது ஏற்புடையது என ஸ்மார்த்த பிராமணரது வேதாந்தம் கூறுகின்றது).
கூட்டு முயற்சி:
‘தமிழன் ஒன்று சேரமாட்டான்” (என்னைத் தவிர) யார் சொன்னா! இது உண்மை என்றால் வேதரடைப்பு
கிராம அபிவிருத்திச் சங்கம் இதற்கு விதிவிலக்காக இருந்தது எனலாம்!
- யோகர் சுவாமிகளது சீடரான அமெரிக்காவிலிருந்து (ஹவாய்) வந்த சுப்பிரமணிய சுவாமிகளது ஆசீர்வாதத்தோடு ஆரம்பமான R.D.S சுவாமிகளை சில தடவைகள் ஊருக்குள் கூட்டிச் செல்கையில்மக்கள் நிறை குடத்தோடு போற்றி வணங்குவார்கள். காஞ்சி காமகோடி பீடத்தைச் சேர்ந்த செந்தில் துறவியையும் இவ்வாறே ஊர்வலமாக அழைத்துச் சென்றிருக்கின்றோம். மண்ணைப் புனிதமாக்கும்
நோக்கமாயிருந்தது. - நல்ல தண்ணீர் பிரச்சினை உள்ள தீவாகையால், மழை நீரை அணைகட்டி – தரவையில், ஆலங்கண்டடியில் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். நீர் பாசனத் துறை நிபுணர்கள் ஆலோசனை கொடுத்து உதவினார்கள்.
- எமது முயற்சிகளைக் கெண்டு மேலும் உற்சாகப்படுத்த யாழ் திட்டமிடல் அதிகாரி சிவதாசன் அவர்கள் சிவன் கோவில் வரை நிழலுக்கு நடுவதற்காக வன்னியிலிருந்து வாகைச் செடிகள் கொடுத்து
உதவினார். அவ்வாறே நட்டிருந்தோம். - பேராதனையிலிருந்து வறண்ட கால புல் நாத்துக்களை கொண்டு வந்து நட்டிருந்தோம்.மாடாடுகள் மேய.
- அதே சிவதாசன் அவர்கள் றுழசடன ஏளைழைெ ஊடாக ரூபாய் 40,000/= கொடுப்பித்தார். குடும்பத்துக்கு ரூ1000/=
கொடுத்து கண்டுத்தாச்சிப் பசு மாடுகளை வாங்க வைத்தோம். சிறுவர்கள் பால் குடிக்கும் நோக்கம்
கொண்ட திட்டம். மாதம் மாதமாக ரூ100/= திருப்பிக் கொடுக்க வைத்து மேலும் நான்கு குடும்பங்களுக்கு
ஒழுங்காக உதவினோம். - நல்ல தர ஆட்டை ஏனைய மறி ஆடுகளோடு மேய விட்டு காதல் உறவுகளை வளர்க்க முயன்றோம்.
- சோலையான் விளையாட்டுக் கழகம்(சோலையான் வைரவரை சிறப்பிக்க):
1 – நல்ல புற்தரைப் பகுதியைத் தேர்ந்து எடுத்து கால் பந்தாட்டப் பயிற்சியைக்
கொடுத்திருந்தோம்.(யாழ் கோஷ்டிக் கப்டன் இரத்தினகோபால் பொறுப்பேற்றிருந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியின் கோஷ்டியில் 6 பேர் நம்மவர்) விரைவில் இது காரை விளையாட்டுக் கழகமாக பரிணமித்தது. - கைப்பந்தாட்டப் பகுதியில் – பல பகுதியில் இருந்துவந்து விளையாட ஆரம்பித்தார்கள்.
- கோயில் கேணியை துப்பரவு செய்து சிறார்களுக்கு நீந்தப் பழக்கினோம்.
- புது வருடத்தை அடுத்;து விளையாட்டுப் போட்டி – வயோதிபர் சண்டிக் கட்டோடு தொந்திகள்
குலுங்க ஓடினார்கள். குடும்பஸ்தர்களுக்கு தேங்காய் உரித்து, உடைத்து துருவிக் கொடுக்கும் போட்டி, சிறுசுகளுக்கும் வரிசையாக வைக்கப்படும். பனங்கொட்டைகளை கடகங்களில் நிரப்பிக் கொடுக்கும் போட்டி.(விழா இறுதியில் பிரதம விருந்தினராக
வந்திருந்த நிலன் திருச்செல்வம் ஆ.ீ அவர்கள் ‘மகாத்மா காந்தி” அவர்களது திரைப்பட பிரதி ஒன்றை எமக்குக் கொடுத்திருந்தார். நாமும் காந்தியடிகள் 1932ம் ஆண்டு
உடையார் நாகலிங்கம் அவர்கள் நமது கிராமத்திற்கு அழைத்து வந்தார் என பெருமையுடன் கூறினோம்). - இலந்தைச் சாலையில் நாமே தோண்டிக் கட்டிய நல்ல தண்ணீர் கிணற்றை பலரும் பயன்படுத்துவதைக்
காணலாம் ‘இறைபணி” என்றால் எமது மறைந்த நண்பர் குணம் அவர்கள். - ஆசிய வங்கியிடம் இருந்து காலஞ்சென்ற திருநாவுக்கரசரது முயற்சியால் மின்சாரம் காரைநகர் வடக்கு பகுதியில் வழங்கப்படுகிறது.
- சங்கத்தின் தலையீட்டால் சுபாஷ் கபே சங்கரன் தீர்த்தக்கரை அருகே ஹோட்டல் கட்டும் முயற்சி
நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் தொடர இருந்த அசிங்கங்களும் நிறுத்தப்படலாயிற்று. வட்டுக்கோட்டை
நிறுவனம் ஒன்று குருசை நட்டு தீர்த்தக்கரையை வேறு நாமம் தரிக்க முற்பட்டது. வைரவ சூலத்தை
ஒத்ததாக இருந்ததனால் அதனை அகற்றுவிக்க நாம் முயலவில்லை.
முப்பொருள் உண்மை:
- பதி பவன் (Bhava) நிஷ்டையில் இருப்பான் சிவன். அவன் தன் ஞானத்தால் போட்ட படத்தை சக்தி(கன்னி) நாம் வாழும் உலகாகப் படைத்துக் கொடுப்பாள். நிறைவுள்ள செயலை நிமித்த காரணம் என்கிறது சைவ சித்தாந்தம்(முன் மாதிரியாக பதி இருப்பதனால் நாமும் குடும்பஸ்தராக இயங்க முற்படுவதே இறை பணி).
1.பதியின் செயல்களே ‘அன்பே சிவம்” எனும் மூலச் செய்தியாகின்றது.
2.பாசம்: பதிக்கு (சிவத்துக்கு ) எதிர் மறையாக இருப்பதுவே பாசம்
இதுவே ‘நான்” எனும் மமதை – ஆணவம்
உண்மையை மூடி மறைக்கும் அஞ்ஞானம்(சிவம் – எதிர்மறை அவம்) ஆணவத்தினிலும் விடுபடாது.
செயல்படுபதுவே – கன்மம்(வினையும் பயனும்) நாம் வாழும் உலகே விஞ்ஞானம் அறிய முற்படும் –
மாயை(சடம் தானாக இயங்காது)
3.பசு – பதிக்கும் பாசத்துக்கும் இடையில் இழுபடுவதுவே ஆன்மா – சடத்து நிலை
நாம் ஆக்கிப் படைத்ததுவே எமது கலாசாரம். செயல்கள் அழகுடையதாக இருப்பின் அது கலை.
அதற்குக் கட்டுப்பாடு அவசியம் – ஆசாரம் (கலை + ஆசாரம் ஸ்ரீ கலாசாரம்) இவ்விதமாக வாழ்ந்து காட்டி
மறைந்த பெரியார்களுக்கு சமூகம் வீர வணக்கம் செய்கின்றது.
அடுத்த தலைமுறையினர் இப்பணிகளைத் தொடர வேண்டும். எமது மண்ணை அழிக்கும் செயல்கள் அசுர
வேகம் கொண்டுவிட்டது. எல்லோரும் தத்தம் பங்குகளை செய்து அர்ப்பணிக்க வந்து சேருங்கள்.
அன்புடன் கலாநிதி வேலுப்பிள்ளை இராமகிருஷ்ணன்.
தங்கோடை காரைநகர்B.A(Cey.) Dip.Ed.(Lon.), M.Phil.(Lon.), Ph.D(Lancaster)
Retd.Dean/Arts & Culture, Eastern University of Sri Lanka