“எனது ஊர் காரைநகர்’ நடாத்தும் நான்காவது “சேவையாளர் கெளரவம்” நிகழ்வு தொடர்பான அறிவித்தல்.!
2024 காரைநகர் சேவையாளர் கெளரவிப்பு நிகழ்வு 2025 ஜனவரி முதல் வாரத்தில் 05.01.2025 அன்று கோலாகலமாக காரைநகரில் நடைபெறவுள்ளது.
அதனையொட்டி வழமைபோல் வெளிவரும் ‘எனது ஊர் காரைநகர்’ சஞ்சிகையில் காரைநகரில் பொதுப்பணிகளை கல்வியாளர்கள், மாணவர்களுடையே ஊக்குவிக்கும் முகமாக கட்டுரை போட்டி ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
கட்டுரை போட்டிக்கான தலையங்கம் ஒன்றே ஒன்று தான். “காரைநகர் அபிவிருத்தி சபை”
இத்தலைப்பிலே கட்டுரை எழுத வேண்டும். காரைநகர் அபிவிருத்தி சபை அன்றும், இன்றும், இனியும்… இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாகவே அமையலாம். காரணம் காரைநகர் அபிவிருத்தி சபையின் ஆரம்பம் முதல் இன்றுவரை அதன் செயற்பாடுகளும், பணிகளும், நிர்வாகமும், சேவைகளும் தெரிந்தால் மட்டுமே இனிவரும் காலத்தையும் தீர்மானித்து கற்பனைக்கும் கொஞ்சம் இடம் கொடுக்கலாம்.

போட்டியில் பங்குபற்றுவதற்கான விதிகள்:
1). முதல் பரிசு: 25,000 ரூபா, இரண்டாவது பரிசு: 15,000 ரூபா, மூன்றாவது பரிசு: 10,000 ரூபா.
2).கட்டுரைகள் இமெயில் ஊடாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.(தட்டச்சு செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை, விளங்கக்கூடிய வகையில் படம் எடுத்தோ அல்லது scan செய்தோ அனுப்பலாம்.
3). சொந்த பெயரில், புகைப்படத்துடன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
4). கட்டுரைகள் A4 size பேப்பரில் மூன்று பக்களிற்குள் அமைய வேண்டும்.
5). காரைநகரை சொந்த இடமாக கொண்ட யாவரும் பங்குபற்றலாம் என்பதுடன் வயதெல்லை இல்லை என்பதுடன் காரைநகரில் பணிபுரியும் அரச மற்றும் அரச சார்பற்ற வெளியிடத்து பணியாளர்களும் பங்குபற்றலாம்.
6). கட்டுரையில் உண்மைத்தன்மை வெளிப்படையானதாக இருத்தல் அவசியம்.
7). கட்டுரைகளை 30.11.2024 நவம்பர் மாத இறுதிக்குள் theesan@karainews.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
8. அனுப்பி வைக்கப்பட்ட கட்டுரைகளிற்கு எழுதியவர்கள் மட்டுமே பொறுப்பானவர்கள், 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் தமது பெற்றோரில் ஒருவரது கையொப்பத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.
9). கட்டுரைகள் கிடைக்கப்பெற்றதும் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்துவதற்கான தொடர்பு இலக்கம் அல்லது விலாசம் தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
10). வெற்றி பெற்றவர்களிற்கான பரிசு 03.01.2025 நடைபெறும் ‘காரைநகர் சேவையாளர் கெளரவம்’ நிகழ்வின் போது வழங்கப்படும்.

காரைநகர் அபிவிருத்தி சபை பற்றியும் அதன் சேவைகள் பற்றியும் அதன் நிர்வாகம் பற்றியும் அதன் ஊடாக இனிவரும் காலங்களில் மண்ணிற்கும் மக்களிற்கும் ஆற்றக்கூடிய பயன்கள் மற்றும் சேவைகளை அறிந்து கொள்ளும் வகையில் நடாத்தப்படும் இப்போட்டியில் கலந்து கொண்டு பணப்பரிசுகளை வெற்றி பெறுவதோடு ‘காரைநகர் அபிவிருத்தி சபை’ பற்றி காரைநகர் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இடம்பெயர்ந்து வாழும் மக்களை மண்ணுடன் மீண்டும் இணைக்கும் பெரும் பணி காரைநகர் அபிவிருத்தி சபையால் மட்டுமே அதிகூடியளவில் சாத்தியம் ஆகும் என்பதனை இன்றைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவும் இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். நன்றி!
– எனது ஊர் காரைநகர், www.karainews.com
தொகுப்பாளர்: தீசன் திரவியநாதன்.
07.10.2024