வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி பள்ளிக்கூடம்)-2013

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை
(சடையாளி பள்ளிக்கூடம்)
வலந்தலை வடக்கு அமெரிக்கன் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை 20ம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் சடையாளிக் கிராமத்திலே வாழ்ந்த வர்த்தகரான
சு.வே.சண்முகம் என்பவரது காணியில் திண்னைப் பாடசாலையாக
ஆரம்பிக்கப்பட்டது. என்றும் அக்காலப் பகுதியில் வாழ்ந்த வீரகத்தி சட்டம்
பியர், அப்புத்துரை சட்டம்பியர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர் என்று
சடையாளியில் வசித்த முதியவர்கள் மூலம் அறிய முடிந்தது.

2013இல் பாடசாலையின் நிலமைகள்….!

ஏறக்குறைய 1925 ம் ஆண்டளவில் அமெரிக்கன் மிஷனரிமார்
பாடசாலையை கையேற்று தற்போது இருக்கும் இடத்தில் ஆரம்பித்தார்கள்.
அக்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்கு
முன்னுரிமை கொடுத்தும் பாடசாலையை நடத்துவதற்கு நிதி உதவி
புரிந்தும் மிஷனரி செயற்பட்டது. காரைநகரில் மருதடியில் தற்போதைய
Church இருக்கும் இடத்தில் இருந்து மிஷனரி பாடசாலைய நிர்வகித்துவந்தது.

தற்போதைய அதிபர் செல்வி விஸ்வநாதன் விமலாதேவி

இப்பாடசாலையின் தலைமை ஆசிரியராக முதன் முதலில் அமரர் நு.து.பொன்
னையா அவர்கள் பதவி வகித்தார். இவர் இப்பாடசாலைக்கு நல்ல வழிகாட்
டியாக இருந்தார். 1956ல் நு.து.பொன்னையா அதிபர் பதவியில் இருந்து இளைப்
பாறினார். இவரது இடத்திற்கு அவரது மைத்துனரான அ.தோ.சங்கரப்பிள்ளை
நியமிக்கப்பட்டார். இவரது காலம் 1957 தொடக்கம் 1964 வரையாகும்.
இக்காலத்தில் 1960ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் பாடசாலையை
பொறுப்பேற்றதுடன் இப்பாடசாலை அரசாங்க பாடசாலையாக மாற்றமடைந்
தது. 1964 இல் அ.தோ.சங்கரப்பிள்ளை இளைப்பாற அவரது தம்பி அ.தோ.
கந்தையா தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

கந்தையா அவர்களின் காலத்தில் பாடசாலை நல்ல முன்னேற்றம் கண்டது.
கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வகுப்புக்கள் ஏழாம் தரம் வரை நடத்தப்பட்
டது. இவரது சேவைக்கு பெற்றோரின் ஒத்துழைப்பும் உறுதுணையாக இருந்
தது. 1971ல் இவர் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு
பின் புதிய அதிபராக த.விசுவலிங்கம் 1972 தொடக்கம் 1973 வரை
கடமையாற்றினார். திருமதி சி.கதிரவேலு(பாப்பா ரீச்சர்) 1974 – 1975 வரை
பிரதி அதிபராகவும் 1986 வரை உதவி அதிபராகவும் பணிபுரிந்து ஓய்வு
பெற்றார்.

1976 ஆம் ஆண்டு தொடக்கம் 1979 வரை த.சிதம்பரநாதன் அதிபராக
கடமை புரிந்தார். இவரின் பின்னர் வி.கனகேந்திரம் 1980ம் ஆண்டு தொடக்
கம் 1982 வரை கடமை புரிந்தார். அடுத்து 1983 தொடக்கம் 1987 வரை
அதிபராக தோ.நல்லையா அவர்கள் பணிபுரிந்தார். இவர் கிறிஸ்தவ மதத்
தவராக இருந்த போதும் சைவசமய முறைப்படி வழிபாடுகள் நல்ல
முறையில் இவரது காலத்தில் நடைபெற்றன. இவரின் பின் திருமதி த.நாகரத்
தினம்(ராசாத்திரீச்சர்) அவர்கள் 1988ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு மே
மாதம் வரை அதிபராக கடமையாற்றினார்.

இவரது காலத்தில் மாணவர்களது கல்வியில் பெருமளவு முன்னேற்ம் ஏற்பட்
டது. கோட்ட மட்ட மற்றும் வலய மட்ட தமிழ்தின போட்டிகள், விளையாட்டுப்
போட்டிகளில் மாணவர்கள் பங்குபற்றி தங்களது திறமைகளை வெளிக்கொனர்
வதற்கு ஊக்குவித்தார். இவரது காலத்தில் மாணவர்கள் பலர்புலமைப்பரிசில்
பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று வந்ததுடன் சித்தியடைந்தும்
வந்தனர்.

1999 இல் நடைபெற 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 16
பேரில் 4 பேர் சித்தியடைந்தனர். அதே போன்று 2000ல் 3 பேரும் 2001,
2002 இல் தலா இருவரும் சித்தியடைந்தனர்.

2005 ல் 155 புள்ளிகளைப் பெற்று நவசிவாயம்பிள்ளை பாலகுமாரனும்
2006ல் 145புள்ளிகளைப் பெற்று ஏகாம்பரம் சோபனாவும் புலமைப் பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்தனர். 1991ல் இடம்பெயர்வு ஏற்பட்ட போதும் இப்
பாடசாலை இடம்பெயராமல் அதிபர் த.நாகரட்ணம் தலைமையில் இயங்கி
வந்தமை குறிப்பிடதக்கது.

2006 முதல் திருமதி புஸ்பலீலாவதி இராசரத்தினம் அவர்கள் அதிபராக
கடமையாற்றி 20– இல் ஓய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து பின்னர் 20–
முதல் செல்வி விஸ்வநாதன் விமலாதேவி அவர்கள் அதிபராக கடமையாற்
றி வருகின்றார்.

இப் பாடசாலையில் காலத்திற்கு ஏற்ப கல்வியை வழங்குவதற்கு பல்வேறு
தேவைகள் நிவர்த்தி செய்ய வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. இங்குள்
ள பிரதான மண்டபம் புனர்நிர்மானம் செய்யப்பட வேண்டியதுடன் தரம் 5இற்
கான வகுப்பறையும் அமைக்கப்பட வேண்டும். அத்துடன் பாடசாலைக்கு மின்
சார வசதி இது வரை செய்யப்படாமையால் நவீன முறையில் கல்விச் செயற்
பாடுகள் முன்னெடுத்து செல்ல முடியாமல் உள்ளதாக கற்பிக்கும் ஆசிரியர்
கள் குறைப்படுகின்றனர். அத்துடன் நகர்ப்புற பாடசாலைகள் போன்று இப்
பாடசாலையிலும் கணனி கல்வியை புகட்டுவதற்கு கணனியும் உலகியல்
அறிவை வளர்ப்பதற்கு தொலைக்காட்சியும் அவசியம்.

அத்துடன் கற்பித்தல் சாதனங்கள் எவையும் இங்கு இல்லை. மாணவர்களின்
வாசிப்பு திறனை விருத்தி செய்வதற்கும் நூல் நிலையம் அமைக்கப்பட
வேண்டும்.

பாடசாலைகளின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 2009 ஏப்பிரல் மாதம் 6ம்
திகதி அதிபர் தலைமையில் பாடசாலையின் மிகச் சிறிய முன் முற்றத்
திலே இடம் பெற்றது. இதனால் விளையாட்டுப் போட்டியை நடாத்துவதில்
மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு லண்டன் காரை அபிவிருத்திச் சபையினர்
காணி கொள்வனவு செய்து விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துக்
கொடுக்க முன்வந்துள்ளனர்.

மாணவர்களுக்கான குடிநீரை துவிச்சக்கர வண்டி மூலம் குடிநீர் விநியோகிப்
பவரிடமிருந்து பெற்றே வழங்கப்படுகின்றது. இங்குள்ள ஆண் மாணவர்களின்
மலசல கூடம் புனரமைக்கப்பட வேண்டி உள்ளது. அதிபர் அலுவலகம்
பாடசாலையின் பின் புறத்திலேயே அமைந்துள்ளது. பொருத்தமற்றதாக காணப்
படுவதனால் அதிபர் அலுவலகத்தை முன்பக்கத்தில் அமைக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட தேவைகள் ஈடுசெய்வதற்கு பழைய மாணவர்களும் நலன்விரும்
பிகளும் முன்வரின் இக்கிராமத்து வறிய மாணவர்களின் கல்வித்தரம் மேலும்
உயர்வடைய வாய்ப்புண்டாகும் அல்லவா.

தீசன் திரவியநாதன்

'எனது ஊர் காரைநகர்"
கனடாவில் வெளியாகும் காலாண்டு
சஞ்சிகை உங்கள் வீட்டிற்கும்
இலவசமாக வந்தடையும். எதுவித
தயக்கமும்இன்றி உடனடியாக
அழையுங்கள்
416 821 8390

உங்கள் விலாசம் அல்லது
தொலைபேசி இலக்கத்தை
மின்அஞ்சலில் அனுப்பவும்.
உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
theesan@karainews.com
நன்றி!

More From Author

யாழ் நகர்க் கல்லூரி (Yarlton college Karainagar)

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *