வைத்தியர் சிவசம்பு கலைச்சந்திரன் (MBBS, MD, MRCOG, FRCSC, FRCOG. Obstetrician & Gynecologist).
காரைநகர் அரசடிக்காடு, விக்காவிலை சொந்த இடமாகவும் யாழ்ற்றன் கல்லூரியின் பழைய மாணவரும் கனடாவில் மூன்று தசாப்தங்களிற்கு மேலாக மகப்பேற்று வைத்தியராகவும் கடமையாற்றி பல்லாயிரக்கணக்கான மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், காரைநகர் மண்ணின் கல்வியிலும் வைத்திய துறையிலும் முன்னேற்றம் காண பலவித உதவிகளை வழங்கி வந்தவருமான Dr. சிவசம்பு கலைச்சந்திரன் அவர்கள் 01.07.2022 முதல் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு காரைநகர் மக்கள் சார்பாகவும் “எனது ஊர் காரைநகர்” சார்பாகவும் வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றோம்.
Dr.கலைச்சந்திரன் அவர்கள் காரைநகர் மண்ணின் மக்களின் கல்வி மற்றும் வைத்தியதுறை சார்ந்து ஆர்வமுடன் செயற்பட்டு வருபவர். ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளத்தின் ஊடாக கல்வி மற்றும் வைத்தியதுறை சார்ந்த செய்திகளை அறிந்து தாமாக முன்வந்து 2007ம் ஆண்டு முதல் “எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக பலவித உதவிகளை வழங்கி வருபவர். ‘எனது ஊர் காரைநகர்” இணையத்தளம் ஊடாக ஊரி அ.மி.த.க.பாடசாலையின் நிலமை அறிந்து 2009ம் ஆண்டுகளில் மின்வசதி மற்றும் வகுப்பறை வசதிகளை மேம்படுத்தி கொடுத்ததுடன், காரைநகர் வைத்திய சாலைக்கு தேவையான வைத்தியசாலை உபகரணங்களை கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாகவும் வழங்கி வந்தவர். அது மட்டுமன்றி மூளாய் கூட்டுறவு வைத்திய சாலையின் வளர்ச்சியிலும் ஆர்வமுடன் செயற்பட்டு வருபவர்.
2015ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகளிற்கு கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஒரு கோடி இருபது இலட்சம் ரூபாய்கள் நிதி திரட்டுவதாக அறிந்து அப்போதைய செயலாளராக பணியாற்றிய தீசன் திரவியநாதன் ஆகிய என்னை தொடர்பு கொண்டு அந்த திட்டத்தினை பற்றி அறிந்து கொள்ள விருப்புடன் தனது பணியிடத்திற்கு அழைத்திருந்தார். மிகவும் பெரும் தொகையாகவும் கனடாவில் அப்போது கனடா காரை கலாசார மன்றத்திற்கு இருந்த பெரும் சவாலான நிலையில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலைகளிற்கான நிரந்தர வைப்பு திட்டத்திற்கு தமாக முன்வந்து 5,000 கனடிய டொலர்களை வழங்கிய செயற்பாடானது அன்றைய நிர்வாக சபையினருக்கு உத்வேகம் அளித்ததுடன் அதே வருடம் அத்திட்டத்தினை முழுமை பெறவைக்கவும் பெரும் உறுதுணையாக விளங்கியது.
கடமைக்காக பெயருக்காக ஊர்ப்பணி செய்பவர்களிற்கு மத்தியில் வழங்கிய உதவிகள் சீராக சென்று அடைந்ததா அதன் பலாபலன்கள் என்ன என்று அவ்வப்போது விசாரித்து அறிந்து கொள்வதிலும் அக்கறையுடன் செயற்பட்டு வருபவர் வைத்தியர் சிவசம்பு கலைச்சந்திரன் அவர்கள். 01.07.2022 அன்று தனது 33 வருட கனடிய வைத்திய பணியில் இருந்து ஓய்வு பெறும் Dr.கலைச்சந்திரன் அவர்கள் தனது ஓய்வு காலத்தினை மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் குடும்பத்தினருடன் பூரண சுகத்துடனும் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Dr. Sivasamboo Kalaichandran, MBBS, MD, MRCOG, FRCSC, FRCOG. Obstetrician & Gynaecologist will be retiring on 1 July 2022. Born in Malaysia, Dr. Kalaichandran was schooled at Yarlton College, Karainagar and Central College, Jaffna before proceeding to Madras Christian College & Kasturba Medical College.
After his medical qualification he worked at the Moolai Cooperative Hospital for several months before proceeding to the UK for further post graduate training. He obtained MRCOG degree in Obstetrics & Gynaecology in 1987. Subsequently he trained in Family medicine as well and obtained a full licence to practice as a principal in General practice.
Dr. Kalaichandran emigrated to PEI, Canada and started practicing as a specialist in OB/ GYN on Canada day, 1st of July 1990. He undertook further training at the national capital, Ottawa and obtained the Canadian specialty degree, FRCSC in 1985. During his 7 year stint at Cornwall as OB/GYN , he was appointed as a lecturer in OB/GYN. He was also awarded the honorary FRCOG degree by the Royal College of Obstetrics and Gynaecology in the UK. Dr. Kalaichandran moved to Scarborough in December 2002 at the request of the local GPs.
As he retires on the 33rd anniversary of starting practice in Canada, Dr. Kalaichandran would like to thank his patients, colleagues, family and friends for all their support. He is especially thankful for the Tamil expat community of patients and GPs and wish them well.