அடிப்படை வசதிகள் இன்றியும் கல்வியி;ல் முன்னேறத்துடிக்கும்
ஊரி அ.மி.த.க பாடசாலை காரைதெற்கு, காரைகிழக்கு, காரைதென்கிழக்கு, ஆகிய மூன்று கிராமசேவையாளர் பகுதிகளைக் கொண்ட மாணவர்கள் கல்வி
பயிலும் பாடசாலையாக ஊரி அ.மி.த.க.பாடசாலை விளங்குகின்றது. தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்கள் கொண்ட இப் பாடசாலையின் அதிபராக திரு. இ. சிறிதரன் கடமையாற்றுவதுடன் ஏழு ஆசிரியர்களும் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்
டு வருகின்றனர்.
அதிகஸ்ரப்பிரதேச பாடசாலையான இப் பாடசாலையில் கல்வி
கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கடற்தொழில், மற்றும்
கூலித்தொழிலை மேற்கொள்ளும் மிகவும் வறிய பெற்றோர்களாக
காணப்படுகின்றனர். அதிபர் மற்றும் ஆசிரியர்களின் விடா முயற்
சியால் மாணவர்கள் பாடசாலைக்கு ஓழுங்காக சமூகமளித்தல்
கற்றலில் ஆர்வம் காட்டல், விளையாட்டுத்துறை என்பவற்றில் நல்
ல முன்னேற்றம் கண்டு வருகின்றது ஊரி அ.மி.த.க.பாடசாலை.
கோட்ட மட்ட, வலய மட்டப் போட்டிகள், மற்றும் பரீட்சைகளில்
பங்கு பற்றும் அளவிற்கு இப்பாடசாலை மாணவர்களை வளப்படுத்
தி உள்ளமை சிறப்பான அம்சமாகும் அதுமட்டுமன்று அப்போட்
டிகளில் இம் மாணவர்கள் வெற்றிகளையும் ஈட்டி பாடசாலையின்
பெயரை வலய மட்டத்தில் உயர்த்தி உள்ளனர்.

2011ம் ஆண்டு 5ம் தர புலமை பரிசில்
பரீட்சையில் தீவக வலயத்தில் ஊரி
அ.மி.த.க பாடசாலை மாணவன்
செல்வன் சுதாகரன் விதுர்சன் (பிட்டியெல்லை.காரைநகர்) 181
புள்ளிகளை பெற்று முதலிடம்!
2008 இல் இடம் பெற்ற வலய மட்ட சிறுவர் அரங்கு நிகழ்வில்
நன்றாக ஆற்றுகைத்திறனை வெளிப்படுத்தி 16 மாணவர்கள் சான்
றிதழைபெற்றுக் கொண்டனர். அத்துடன் கடந்த ஆண்டு இடம்பெற்
ற வலய மட்ட தழிழ் மொழித்தினப் போட்டியில் ஆக்கத்திறன்
வெளிப்பாடு, கதைகூறல் போட்டியில் தரம் 5ஐ சேர்ந்த இ. துலக்
தஷன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் மாவட்டமட்
டப் போட்டியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டார்.

2008இல் தமிழ் மொழித்தினப் போட்டியில் ஆக்கத்திறன் வெளிப்பாடு, கதைகூறல் போட்டியில் வலய மட்டத்தில் முதலிடத்தையும் மாவட்ட மட்டத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்ட தரம் 5ஐ சேர்ந்த இ.துலக்தஷன்
அத்துடன் காரைநகர் மணிவாசகர் சபை கடந்த ஆண்டு நடத்
திய சமயபாட பரீட்சையில் தரம் 3 இல் கல்வி பயிலும் து.
விதுஷன் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். இவ்வாறு
மாணவர்கள் வலயம், மாவட்டமட்டங்களில் தங்கள்
திறமைகளைக் வெளிக்கொணர்வதுடன் தரம் 5 பலமைப்பரிசில்
பரீட்சையிலும் குறிப்பிடத்தக்களவு புள்ளிகளைப் பெற்று வருகின்
றனர். கடந்த ஆண்டு 25 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்
றியதுடன் 80 க்கு மேற்பட்ட புள்ளிகளை பல மாணவர்கள் பெற்
றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு கல்வியில் மட்
டுமன்றி விளையாட்டுத்துறையிலும் தங்கள் திறமைகளை வெளிக்
கொணரத் தவறவில்லை.

2008இல் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் 100மீற்றர், 75மீற்றர் ஓட்டத்தில் முதல் இடத்தை பெற்று கொண்ட தரம் 5ஐ சேர்ந்த த.கோபிகா
இந்த ஆண்டு நடைபெற்ற கோட்ட மட்ட விளையாட்டுப் போட்
டியில் தரம் 5ல் கல்வி பயிலும் த. கோபிகா 100 மீற்றர் ஒட்டத்
திலும் , 75 மீற்றர் ஒட்டத்திலும் முதலாம் இடத்தைப் பெற்றுக்
கொண்டதுடன் தரம் 4இல் கல்வி பயிலும் த. தபோதினி உயரம்
பாய்தலில் முதலாம் இடத்தையும் தரம் 5ல் கல்வி பயிலும் தே.
டிலானி 100 மீற்றர் ஒட்டத்தில் 2ம் இடத்தையும் தரம் 5ல் கல்
வி பயிலும் த. தனுஷியா நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்
தையும் பெற்றுள்ளார்.









“வீடு தோறும் கலையின் விளக்கம் வீதி முற்றிலும் பல, பல பள்
ளி” என்ற பைந்தழிழ் புலவன் பாரதியின் வேணவாப் போல, ஈழத்
திருமண்ணில் கல்வி அறிவும் சமய ஞானமும் மிக்க
காரைநகரின் தெற்குத்திசையில் இயற்கையான அமைதியான
சூழலில் கடற்கரை அருகிலே அமைந்த இந்த ஊரிக்கிராமத்தில்
கல்வியின் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளது ஊரி அமரிக்
கன் மிசன் தழிழ் கலவன் பாடசாலை.
இப்பாடசாலை இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது
1858 இல் அமெரிக்கமிஷனரியினால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்
தில் காரைநகர் தேவாலயத்துடன் சேர்ந்து இயங்கி வந்தது. பின்
னர் 1890களில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி
வந்துள்ளது. தொடர்ச்சியாக சிறப்பாக இயங்கி வந்த இப்
பாடசாலை 1991ல் தீவகத்தில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின்
போது வலிகாமத்தில் சில வருடங்கள் இயங்கி பின் மூடப்பட்டிருந்
தது.
1996 இல் மக்கள் மீளக்குடியமர்ந்த போதிலும் இப் பாடசாலை
மீள ஆரம்பிக்கப்படாமல் இருந்தது. இதனால் இப்பிரதேச மாணவர்
கள் பல மைல் தூரம் நடந்து சென்று அயல் பாடசாலைகளில்
கல்வி கற்க நேரிட்டதுடன் இப் பிரதேசத்தில் இருந்து
பாடசாலைக்குச் செல்லும் சிறார்களின் தொகையும் வீழ்ச்
சியடைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு மீளக்குடியமர்ந்து
ஏழு வருடங்களின் பின்னர் 30 மாணவர்களையும் இரண்டு
ஆசிரியர்களையும் கொண்டு 2003ம் ஆண்டு யூலை மாதம் மீள
ஆரம்பிக்கப்பட்டது.
ரெைஉநக நிறுவனத்தினால் தீவக வலயத்தில் கடந்த 2007ம் ஆண்
டு தெரிவு செய்யப்பட்ட ஐந்து பிள்ளை நேயப் பாடசாலைகளில்
ஒன்றாக இப் பாடசாலை தெரிவுசெய்யப்பட்டது. இவ்வாறு கல்
வியிலும் விளையாட்டிலும் உயர்வடைந்து வருகின்ற போதிலும் இ
ப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவரும்
வறுமைக் கோட்டிற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
பாடசாலையில் அடிப்படைவசதிகள் மிக மிகக் குறைவாகவே
காணப்படுகின்றது. மாணவர் தொகைக் கேற்ப கட்டட வசதிகள்
இல்லாமையால் கற்பித்தல் செயற்பாடுகளில் பவல்வேறு சிரமங்
களை எதிர் நோக்க வேண்டியிருந்தது. இக்குறையினை தீர்க்க
2011ம் ஆண்டில் புதிய இரண்டு மாடி கட்டிடம் அமைக்கவும் அத்
திவாரம் இடப்பட்டுள்ளது. அத்துடன் இடிந்து போயிருந்த கட்டிடங்
கள் மீள புனரமைக்கப்பட்டுள்ளதுடன், கணணிக் கல்வியும் இங்
கே முறையாக பயில்வதற்கு வேண்டிய தேவைகள் நிறைவேற்றப்
பட்டுள்ளன.
பாடசாலைகளின் சுற்று வேலிகள் சிரான முறையில் அமைக்கப்
படாமையினால் கால்நடைகள் பாடசாலைக்குள் இ
ரவுவேளைகளில் வந்து தங்குவதனால் தினமும் அவற்றின் எச்சங்
களை அகற்றி துப்பரவு செய்வதில் ஆசிரியர்களும் மாணவர்
களும் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். விளையாட்டு
மைதானம் ஒன்று இருந்து அது விளையாட்டு செயற்பாடுகளுக்கு
உரிய முறையில் செப்பனிட்டு புனரமைக்கப்படமையினால்
விளையாட்டுச் செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள
முடியாத நிலை காணப்படுகின்றது.
நூலகத்திற்கான கட்டட வசதியோ நூல் நிலையமோ அமைக்கப்
படாமையால் மாணவர்கள் வாசிப்புத் திறணை விருத்தி செய்ய
முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் அதிபர், ஆசிரியர்
களுக்கான அலுவலகங்கள் உரிய வசதிகளுடன் அமைக்கப்
படாமல் உள்ளது.
பிரதான வீதியில் இருந்து மூன்று, நான்கு கிலோ மீற்றர்
தொலைவில் இப்பாடசாலை அமைந்துள்ளதால் மூன்று, நான்கு
கீலோமீற்றர் கால்நடையாகவே ஆசிரியர்கள் வரவேண்டிய நிலை
காணப்படுகின்றது. இந்த வீதியின் ஒரு பகுதியும் சேதமடைந்திருப்
பதனால் மழைகாலங்களில் நடந்து வருவதிலும் பெரும்சிரமங்
களை எதிர்நோக்குகின்றனர். இப்பாடசாலையில் கற்பிக்கும்
ஆசிரியர்கள் அனைவருமே வெளியூர்களிலிருந்தே வருகை தருகின்
றார்கள். இப்பாடசாலையில் தரம் 5 கல்வியை நிறைவு செய்த
மாணவர்கள் தரம் 6ல் கல்வியை தொடர்வதற்கு பலமைல்
தொலைவில் உள்ள பாடசாலைகளுக்கே கால் நடையாக செல்
லவேண்டியுள்ளது. இதனால் தரம் 5ல் கல்வியுடன் சில மாணவர்
கள் கல்வியை இடைநிறுத்துவதாக கூறப்படுகின்றது. எனவே இப்
பாடசாலையில் ஏனைய வகுப்புக்களையும் ஆரம்பிக்கவேண்டிய
தேவை உள்ளது. இடப்பெயர்வுக்கு முன்னர் இந்த வீதியூடாக இ
டம்பெற்ற பஸ் சேவைகள் தற்போது இடம்பெறாமையால் இக்
கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பல சிரமங்களை எதிர் கொள்கின்
றனர்.
வெளியூர்களில் இருந்து வருகை தரும் அதிபர், ஆசிரியர்களின்
விடாமுயற்சியும் அர்ப்பணிப்புடனான சேவையாலும் இந்த மாணவர்
களின் கல்விச் செயற்பாடுகள் உயர்வடைந்து வருவதனை
அவதானிக்க முடிகின்றது. எனினும் அடிப்படை வசதிகளை இப்
பாடசாலைக்கு ஏற்படுத்திக் கொடுக்க அனைத்துதரப்பினரும் முன்
னின்று செயற்படுவார்களாயின் தீவக கல்வி வலயத்தில் ஆரம்ப
பாடசாலைகளில் கூடிய மாணவர் தொகையைக் கொண்ட
பாடசாலைகளில் ஒன்றாக விளங்கும் இப்பாடசாலையின் மாணவர்
களின் கல்வித்தரம் மேலும் உயர்வடைவதுடன் கிராமமும் உயர்
வடையும் என்பதில் ஐயம் இல்லை.