சமுர்த்தி வங்கி முகாமையாளருடனான நேர் காணல்
செவ்வி கண்டவர்:- ந.பாரதி
வணக்கம் சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் தி.சசிக்குமார் அவர்களே!
வணக்கம்!
கேள்வி:- சமுர்த்தி இயக்கத்தின் பொதுவான செயற்பாடுகள் எவை என
கூறுங்களேன்?
பதில்:- சமுர்த்தி என்பது சுபீட்சம் என்பதே பொருள். இங்கு மிகவும் வறிய
நிலையில் இருக்கின்ற மக்களது சமூக பொருளாதார வாழ்வாதார நிலைகளை
உயர்த்தி அவர்களது வாழ்வை ஒரு நிலைப்படுத்திக் கொள்கின்ற
பெரியதொரு பணியினை ஆற்றுகின்ற அமைப்பாக சமுர்த்தி அமைப்பு
காணப்படுகின்றது. இது பல பிரிவாக செயற்பட்டு வருகின்றது. அதாவது
மக்களின் சேமிப்பினை தூண்டுவதற்கு சமுர்த்தி வங்கியும், மற்றும் வறிய
மக்களுக்கு உணவு முத்திரை வழங்கல், சிறு கருத்திட்டங்களை
நடைமுறைப்படுத்தி கிராமங்களை அபிவிருத்தி செய்தல் போன்றவற்றினைக்
குறிப்பிடலாம். மேற்குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பல விரிவான செயற்பாடுகளைக்
கொண்டது. என்றுதான் கூறமுடியும்.
கேள்வி:- நீங்கள் கூறும் பொதுவான செயற்பாடுகளில் காரைநகரில்
எந்தளவில் செயற்படுகின்றீர்கள்?
பதில்:- காரைநகரை பொறுத்தளவில் சமுர்த்தியின் செயற்பாடுகள் மிகவும்
திறமையாக செயற்பட்டு வருகின்றது. இதற்காக இரு சமுர்த்தி
முகாமையாளர்களும் 13 சமுர்த்தி உத்தியோகத்தருமாக 15 பேர்
நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு கடமை புரியும். என்னைத் தவிர அனைத்து
உத்தியோகத்தர்களும் உங்கள் மண்ணின் மைந்தர்கள் ஆதலால் அவர்கள்
மேலும் மேலும் விசுவாசத்துடன் செயற்படுவதனை அவதானிக்க முடிகிறது.
வங்கிச் செயற்பாட்டிற்காக வலந்தலைச் சந்தியில் சமுர்த்தி வங்கி
அமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக வலயச் செயற்பாடும் இங்கு
நடைபெறுகின்றன. மேற்குறிப்பிட்ட எமது 15 உத்தியோகத்தர்களில் தலையாக
முகாமையாளரும் ஒரு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமாக இருவரும்
என்னுடன் ஏனைய ஐந்து உத்தியோகத்தர்களும் கள நிலை
உத்தியோகத்தர்களாக மிகுதி ஏழு பேரும் கடமையாற்றுகின்றனர். இக்கள
நிலை உத்தியோகத்தர்கழூடாக இக் கிராமத்தின் அடிமட்டத்தில் உள்ள
பிரச்சனைகளை அதாவது மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திகளை
இனங்கண்டு அவற்றினை செயற்படுத்தும் அதே வேளை வறிய மக்களின்
வாழ்வாதார பிரச்சனைகளும் ஓரளவு தீர்க்கப்பட்டு வருகின்றது.
கேள்வி:- சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்களேன்?
பதில்:- எமது சமுர்த்தி வங்கிச் சங்கமானது வறிய மக்களின் சேமிப்பு
பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இவர்களில் ஐந்து
பேரினை ஒன்றினைத்து குழுவாக்கி வாரம் வாரம் சேமித்து எமது வங்கியில்
வைப்பிலிட ஊக்குவிக்கின்றோம். ஆகக் குறைந்தது 5ஃஸ்ரீ முதல் வைப்பிலிட
முடியும். இது கட்டாயப்படுத்தப்படுகின்றது. அத்துடன் நிவாரண முத்திரையில்
ஒரு பகுதி பணமாக எமது வங்கியினூடாக வழங்குகின்றோம். இவர்களது
சேமிப்பு பணமே எமது வங்கியின் மூலதனமாகும். இம் மூலதனத்தை மீண்டும்
அவர்களுக்கே கடனாக வழங்கி வருகின்றோம். அவர்களது சேமிப்புக்கு வட்டி
வழங்கும் அதே நேரம் கடனடிப்படையில் பணம் வழங்கி இவர்களின்
சுயதொழில் முயற்சியையும் ஊக்குவித்து வருகின்றோம்.
ஏனைய நிதி நிறுவனங்களை விட எமது வங்கியின் விசேட நன்மை
என்னவென்றால் கடன் வழங்கும் போது எந்தவித சொத்துப் பிணைகளோ
பொறுப்போ பெற்றுக் கொள்வதில்லை. அவர்களின் குழு அங்கத்தவர்களின்
சிபார்சே போதுமானதாகும். இதன் மூலம் எமது மக்கள் கடன் பெற அலைய
வேண்டியதில்லை என்பதுடன் அநியாய வட்டியிலிருந்தும்
பாதுகாக்கப்படுகின்றனர். இங்கு ஏழு வகையான வைப்பு கணக்குகள்
உள்ளன. அதாவது பங்குக் கணக்கு, அங்கத்தவர், அங்கத்தவர் அல்லாதவர்,
குழு, சிறுவர், மகளீர், சிசுரக்க (பாடசாலை மாணவர்க் கணக்கு) என்பதாகும்.
மொத்தமாக எமது வங்கியில் 5365 கணக்குகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
அத்துடன் சுமார் 513 பேருக்குமாக சுமார் 85 இலட்சம் ரூபா கடனாக
வழங்கியுள்ளோம். சாதாரணமாக 5ஃஸ்ரீ வைப்பில் இருந்து இவ்வளவு கடன்
கொடுக்கும் அளவிற்கு வளர்ந்தது ஒரு சிறப்புத்தானே.
கேள்வி:- நாங்கள் கூறுவது போல சிறப்பு என்பதை விட நமது காரை
மண்ணுக்கும் ஒரு பெருமை தானே. மிக்க மகிழ்ச்சி. உங்கள் வங்கி
சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சமூக உதவிக்ள் எவையென கூறமுடியுமா?
பதில்:- ஆம். விரிவாகச் சொன்னால் குறித்த நேரம் போதாது. ஆகவே
சுருங்கக் கூறுகின்றேன். பொதுவாக அடிப்படை வேலைத்திட்டத்தினை மட்டுமே
மேற்கொள்கின்றோம்.
- மிகவும் பின்தங்கிய கிராமங்களில் 2 புதிய கிணறுகள் அமைத்து
கொடுத்துள்ளதுடன் 06 கிணறுகள் புனரமைத்து கொடுத்துள்ளோம். - 27 வீடுகள் அமைப்பதற்கு சுமார் 50,000 ரூபா வீதம் மானியமாக
வழங்குகியுள்ளோம்.. - சிறிய கிராம வீதிகள் 09 புனரமைத்துள்ளோம்.
- வீட்டு விற்பனை நிலையம், மற்றும் நடமாடும் வண்டில் மூல
விற்பனையாளர்களுக்கு வட்டியில்லாக் கடன்; வழங்கப்பட்டுள்ளது. - 1998 குடும்பங்களுக்கு இலவச உணவு முத்திரை நிவாரணம்
வழங்கியுள்ளோம். - க.பொ.த. உயர்தர கல்வி கற்கும் சுமார் 20 வறிய மாணவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு மாதா மாதம் 500 ரூபா வீதம் வழங்கப்பட்டு கல்வியில்
ஊக்குவித்து வருகின்றோம். - சர்வதேச புகைத்தல் எதிர்ப்புதின கொடி விற்பனை மூலம் நிதிபெறப்பட்டு
நூற்றக்கு மேற்பட்ட வறிய மாணவர்களிற்கு பாடசாலை உபகரணம்
வழங்கியுள்ளோம். - மேலும் சமுக சேவைகளாக பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களிற்கு
இலவசமாக அவற்றினை பெற்றுக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகள்
நடைபெற்று வருகின்றது. - சமூக பாதுகாப்புத் திட்டத்தினூடாக பயனாளி ஒருவரின் குடும்பத்தில்
மரணக் கொடுப்பனவாக உடனடியாக 10,000 ரூபாவும் திருமணம் நிகழுமாயின்
3000ரூபாவும் மகப்பேறு நிகழுமாயின் 2500 ரூபாவும், வைத்திய சாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்தால் நாள் ஒன்றிற்கு 50 ரூபா வீதமும் வழங்கப்பட்டு
வருகின்றது.
கேள்வி:- நன்றி முகாமையாளர் அவர்களே! எமது கிராமத்திற்கு
காலத்திற்கேற்ற உதவி போல திறமையாக செயற்பட்டு வருகிறீர்கள்.
இவ்வாறு சேவையாற்றும் உங்களிற்கு ஏதாவது தடைகள் அல்லது கஸ்ரங்கள்
ஏதாவது உண்டா?
பதில்:- (புன்சிரிப்புடன்) நாங்கள் மக்களின் உத்தியோகத்தர்கள், அவர்களின்
திருப்த்தியே எங்கள் மகிழ்ச்சி. அந்த வகையில் கடமையாற்றும் போது
ஏற்படும் இடையூறுகள் எவையும் பெரிதாக தெரியவில்லை. ஆனாலும் எமது
மக்களை 100மூ திருப்த்திப்படுத்துவது என்பது எவராலும் முடியாத காரியம்.
ஆனால் எம்மால் இயன்றளவு சுமாராக திருப்த்திப்படுத்தி
சேவையாற்றுகின்றோம். ஆனாலும் ஒன்று மட்டும் மிக முக்கியமான கவலை
என்னவெனில் மேற்குறித்த சேவைகள் அனைத்தும் மேற்கொள்ளும் போது
உத்தியோகத்தர்கள் எமது மக்களுக்காக தம்மை தியாகம் செய்தே
சேவையாற்ற வேண்டியுள்ளது. இது அரசாங்கத்தின் வங்கி என்பது தவறு.
மக்களின் வங்கியாகும். அந்த வகையில் புலம் பெயர் அமைப்பக்களிடம்
கணனி ஒன்றினை கோரினோம். அனைத்தும் மௌனமாகி விட்டன. ஏன் என்று
புரியவில்லை? எமது நிலையறிந்து ஒரு முழுமையான கணனி கிடைக்கும்
பட்சத்தில் இன்னமும் எமது சேவை அதிகரிக்கும். ஏன்பதில் ஐயமில்லை?
தங்கள் ஆதங்கம் புரிகிறது. புலம் பெயர் அமைப்புக்களும்
விளம்பரபடுத்தலுக்கு ஏற்ற அபிவிருத்திகள் சிலவற்றினைத் தான்
முனைப்புடன் செய்து தங்களை விளம்பரபடுத்தி;க் கொள்கின்றன. ஆனாலும்
தங்களின் சேவைக்காக எமது சஞ்சிகையினூடாக உண்மை நிலையை
விளக்குவோம் எனக் கூறி இவ்வளவு நேரமும் இன்முகத்துடன் எமக்கு செவ்வி
தந்த முகாமையாளருக்கு மீண்டும் எமது வாசகர் சஞ்சிகை சார்பாகவும் நன்றி
கூறி விடைபெற்றுக் கொள்கின்றோம். நன்றி! வணக்கம்.