காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 2

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள்

காரைநகர் பாடசாலைகளில் அன்றும் இன்றும் விளையாட்டுப் போட்டிகள் முதலாம் தவணையில் நடைபெறும். கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய, மாணவர்கள் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பெறும் பெரு விளையாட்டுக்களில் பங்குபற்றுவார்கள். கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளார்கள்.

கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் முதலாவது மெய்வல்லுனர் போட்டி வலந்தலை கண்ணகி அம்மன் கோயிலுக்கு கிழக்கே உள்ள வெளியில் நடைபெற்றது. தினந்தோறும் மாணவர்களை ஆசிரியர்கள் விளையாட்டில்
ஈடுபட இப்பகுதிக்கு அழைத்துச் செல்வது வழமை. 1953ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள குழுவி மதவுக்கு பின்புறமாகவுள்ள தச்சன் பனையடி என்னும் இடத்தில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். அமரர் ந. நடராஜா
ஞாபகார்த்த மண்டபம் மகப்பேற்று மருத்துவமனை ஆகியவற்றை நிர்மாணித்து எஞ்சிய காணியை அவரின் துணைவியார் அமரர் தங்கம்மா நடராஜா அவர்களால் தற்போதைய விளையாட்டு மைதானம் அன்பளிக்கப்பட்டது. இம்மைதானத்தை சீரமைப்பதில் அமரர் து.ஊ. அருளம்பலம் பெரும் பங்காற்றினார்.

1964ஆம் ஆண்டு; கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கும், 1970களில் அமைக்கப்பட்ட சுற்று மதில்களும்; சேதமடைந்துள்ளது. இம்மைதான விளையாட்டு இடப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டு, பார்வையாளர் அரங்கு நவீன வசதிகளுடன்; அமைக்கப்பட்டு, அத்திவாரமிடப்பட்டு கம்பி வலை சுற்று வேலி (Wire mesh) அமைக்கப்பட்டு மழை காலங்களிலும் மைதானம் பாவிக் கக்கூடியதாக தயார் செய்யப்படல் வேண்டும். காரைநகர் மத்தியில் அமைந்துள்ள இம்மைதானம் மாவட்ட மைதான தரத்துக்குதரம் உயர்த்துவதற்கு மேற்கூறிய பணிகளை நிறைவு செய்ய 10 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படும்.

யாழ்ரன் கல்லூரி விளையாட்டு மைதானம் கனடா காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் சுற்று வேலிகள் அமைக்கப்பட்டு போதுமான விளையாட்டு இடப்பரப்பு உள்ளதாக அமைந்துள்ளது. விளையாட்டு நிகழ்வுகளுக்கு உபயோகிக்கப்படும்
இடத்தின் நிலத்தன்மையை அபிவிருத்தி செய்தல், புல் நடுதல் ஆகியன விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஊக்குவிப்பாக அமையும் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் பயன்தரு மரங்களை நாட்டிப் பேணல் கல்லூரியின் கவினுறு நிலையை மேம்படுத்தும்.

சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயத்தின் ஆரம்பகால பிரதான மண்டபம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அம்மண்டபம் அகற்றப்பட்டு ஆலடியில் இயங்கும் ஆரம்ப பிரிவுக்கு தேவைப்படும் கட்டடத்தொகுதியை அமைக்க பயன்படுத்தலாம். இம்மண்டபம் அமைந்துள்ள இடப்பரப்பை ஏற்கனவே திட்டமிட்டவாறு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்தல் வேண்டும்.

வியாவில் சைவ வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புல் நடுதல் விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஊக்குவிப்பாகஅமையும். மைதானத்தை சுற்றி அத்திவாரம் அமைத்து அவற்றிற்கு கம்பி வலை சுற்றுவேலி; (Wire Mesh) அமைத்தல் வேண்டும்.

விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கு அவசியமானதொன்றாகும்

கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் யாழ் மாவட்டம், வடக்கு, கிழக்கு மாகாண போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றிய விபரங்கள்:


1934ஆம் ஆண்டு நடைபெற்ற ( ALL CEYLON ATHLETIC MEET) அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கு பற்றி திரு. அ. சுந்தரம்பிள்ளை, திரு. க. சுப்பிரமணியம் ஆகியோர் பரிசில்களைப் பெற்றுள்ளனர் என 1934ஆம் ஆண்டில் கரவெட்டியில் வெளியிடப்பட்ட க்ஷக்ஷஞானசித்தி;; எனும் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1934ஆம் ஆண்டு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் ஜே.எஸ் பரீட்சையில் 13 பேர் இரண்டாம் பிரிவிலும் வடமாகாணத்தில் ஒருவர் 1ஆம் பிரிவிலும் சித்தி எய்தியமைக்கான பாராட்டு விழா சிவத்திரு. அ. சீதாராம ஐயர்
தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இவ்விருவரினதும் வெற்றிச் செய்தி கிடைக்கப்பெற்றுஅறிவிக்கப்பட்ட பொழுது மாணவர் எல்லைமீறி குதூகலித்தமையை அன்றைய விழாவில் சமூகமாயிருந்த மாணவர் மூலமாகஅறியக்கூடியதாகவிருந்தது.

  • திரு. அ. சுந்தரம்பிள்ளை கோல் ஊன்றிப் பாய்தல், குறுந்தூர ஓட்ட வீரர் உதைபந்தாட்டத்தில் இடது கரை வீரர் (Right Extreme)
  • சடையாளி பரியாரி நாராயணியின் சகோதரர் கணபதிப்பள்ளை பொன்னாலையில் வசித்தவர். தனது மகன் சுப்பிரமணியத்
    தை காரை இந்துக் கல்லூரியில் கற்பதற்காக அனுப்பி வைத்தார். திரு. சுப்பிரமணியம் குறுந்தூர ஓட்ட வீரர்.
  • 1960ஆம் ஆண்டின் முற்பகுதியில் காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற மாப்பாணவூரியை சேர்ந்த திரு. வேலுப்
    பிள்ளை சிவம்; அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றினார்.
  • செல்வன.; செல்வரத்தினம் இராதாகோபாலன் 1973, 1974ஆம் ஆண்டுகளில் 13 வ. கீ 15 வ. கீ ஆண் பிரிவுகளில் யாழ் மாவட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியில் 100அ, நீளம் பாய்தல், உயரம் பாய்தல் நிகழ்ச்சிகளில் 1ஆம் இடங் களைப் பெற்று இலங்கைப் பாடசாலைகள் சங்க 1973ஆம் ஆண்டு மெய்வல்லுனர் போட்டியில் 100அஇ உயரம் பாய்தல்ஆகிய நிகழ்ச்சிகளில் 1ஆம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். நீளம் பாய்தல் நிகழ்வில் 2ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 1974 இல 100அஇ 1ஆம் இடம் தங்கப்பதக்கம் நீளம் பாய்தல் 2ஆம் இடம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • செல்வன். கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன்
    1978, 1977, 1980, 1981, 1982ம் ஆண்டுகளில் 15 வ. கீ ஆண், 17 வ. கீ. ஆண், 19 வ. கீ. ஆண் ஆகிய பிரிவுகளில் 200அஇ 400அஇ உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், 400அ தடைதாண்டல், தட்டு எறிதல், முப்பாய்ச்சல் ஆகிய நிகழ்ச்சிகளில்யாழ் மாவட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியில் 1ஆம் இடங்களைப் பெற்று இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியவர். 1980ஆம் ஆண்டு: இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டியில் 400அ தடை தாண்டலில் 4ஆம் இடத்தைப் பெற்றவர்.
  • செல்வன். சபாரத்தினம் கோவிந்தராசா
    1977, 1978, 1979, 1980, 1981ஆம் ஆண்டுகளில் 13 வ.கீ. ஆண், 15 வ.கீ ஆண், 17 வ.கீ. ஆண், 19 வ.கீ. ஆண் ஆகிய பிரிவுகளில் 100அஇ 200அஇ நீளம் பாய்தல் நிகழ்ச்சிகளில் யாழ் மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டிக்கு தகுதி பெற்று பங்குபற்றியவர். 100அஇ 200அஇ நிகழ்ச்சிகளில் தெரிவுப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டிகள் வரை முன்னேறியவர்.
  • செல்வன். திருநாவுக்கரசு யோகராசா
    1980, 1981, 1982ம் ஆண்டுகளில் 17 வ.கீ. ஆண், 19 வ.கீ. ஆண் ஆகிய பிரிவுகளில் 1500m, 3000m, நிகழ்ச்சிகளில் யாழ் மாவட்டப் பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று இலங்கை பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியவர்.
  • 4X100, 4X400 அஞ்சல் அணிகள் யாழ் மாவட்ட பாடசாலைகளு;கிடையில் கல்வித் திணைக்களம் நடாத்திய போட்டியில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டும் போட்டியில் பங்குபற்றவில்லை அணி வீரர்கள் விபரம்:
ந. யோகநாதன்ந. சுந்தரேஸ்வரன்
வே. பரராஜசிங்கம்பொ. இராசரத்தினம்
ந. உருத்திரசிவம்மு. அழகேந்திரன்
ந. ஜீவராஜ்க. சிவலிங்கம்

இந்த மெய்வல்லுனர் போட்டியில் பல நிகழ்ச்சிகளில் வெற்றிகளைப் பெற்று காரை இந்துக் கல்லூரி 1ஆம் இடத்தைப்
பெற்றது. இப்போட்டியின் பிரதம அதிதி திரு. ளு. தங்கராசா, பிரதம கல்வி அதிகாரி உரையாற்றும் போது கிராமப் பாடசாலை
ஒன்று யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு 1ஆம் இடத்தைப் பெற்றமை அப்பாடசாலைச் சமூ
கம் விளையாட்டில் எடுத்துக் கொண்ட முயற்சியும் அர்ப்பணிப்பும் பாராட்டப்பட வேண்டியது என்று குறிப்பிட்டார்.

மேற்கூறப்பட்ட இலக்கங்கள் 04. – 07 வரையான நிகழ்வுகள் திரு. அ. சோமஸ்கந்தன் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் பயிற்றுவிக்கப்பட்டு யாழ் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய போட்டிகளில் பங்குபற்றியவர்கள் (08 உட்பட) திரு. அ. சோமஸ்கந்தன் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் வசித்தவர்.

1965ஆம் ஆண்டில் இருந்து 1983 வரை கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியராக கடமை ஆற்றியதுடன் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கூறப்பட்ட மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு மாவட்ட, தேசிய மட்ட
விருதுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர். விஞ்ஞானம் கற்பித்தலில் நுட்பங்களை கையாண்டு கற்பித்தமையால் மாணவர் மனங்களை வென்றவர். காரைநகர் விளையாட்டுத்துறைக்கு திரு. சோமஸ்கந்தனின் பங்களிப்பு காத்திரமானவை.

  • செல்வன் சொர்ணலிங்கம் புஸ்பலிங்கம் 2001ஆம் ஆண்டு 15 வ.கீ ஆண்கள் பிரிவில் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் வடகிழக்கு மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றினார். தேசியமட்டத்தில் 10ஆம் இடத்தைப் பெற்றார்
  • 2002, 2003ஆம் ஆண்டுகளில் 17 வ.கீ. ஆண் பிரிவில் வடகிழக்கு மாகாண மட்டப் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்றதுடன் 1.72m உயரத்தைத் தாண்டி புதிய சாதனையையும் ஏற்படுத்தி தங்கப் பதக்கம் பெற்றவர். தேசிய மட்டத்தில் 2002ஆம் ஆண்டு 8ஆம் இடத்தைப் பெற்றார்.
  • அமெரிக்கரான Fosbury என்பவர் Fosbury Flop என்று அழைக்கப்படும் நுட்பத்தை அறிமுகப்படுத்தி 1968ல் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற நுட்பத்தை செல்வன் சொ.புஸ்பலிங்கம் காரைநகரில் முதன்முறையாக கையாண்டார். இம்மாணவன் வைக்கோலை சாக்கிற்குள் நிறைத்து அவற்றை மெத்தையாகப் பாவித்து (பாய்;தலுக்கான மெத்தை இன்மையால்) பாய்வதும் பேட்டியும் காரை ஆதித்தியன் 2005 சுடர் 01 இல் பிரசுரமாகியிருந்தது.
  • செல்வி காந்திதிலகர் உதயா
    2001ம் ஆண்டு 17வ.கீ.பெண்கள் பிரிவில் 1500அ நிகழ்ச்சியில் 3ம் இடத்தை வடகிழக்கு மாகாணப் போட்டியில் பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றினார்.
  • செல்வி பரமானந்தசிவம் கலைமகள் 2001ம் ஆண்டு 19வ.கீ. பெண்கள் பிரிவில் 1500M, 3000, நிகழ்ச்சியில் வடகிழக்கு மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.
  • செல்வன் சந்திரசேகரம் சந்திரகுமார் 2003ம் ஆண்டு 14 வ.கீ. ஆண்கள் பிரிவில் யாழ் மாவட்ட துரெழைச Junior Athletic Meet இல் 1ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட Junior Athletic Meet இல் பங்குபற்றினார்.
  • தேசியமட்டப் போட்டியில் தகுதி பெற்றிருந்தும் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றாத மாணவர் விபரம்
  • செல்வி வேலாயுதம் சிவதாரணி 2002ம் ஆண்டு 19 வ.கீ. பெண்கள் பிரிவில் 400அ தடைதாண்டல் நிகழ்ச்சியில் வடகிழக்கு மாகாணமட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
  • செல்வன் பேரின்பராசா சசிக்குமார் 2001ம் ஆண்டு 13 வ.கீ.ஆண்.கள் பிரிவில் வடகிழக்கு மாகாண மட்டப் போட்டியில் 200அ நிகழ்ச்சியில் 3ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
  • செல்வி சோ.திவ்வியா 2004ம் ஆண்டு Jaffna District Junior Athletic meet இல் 16 வ.கீ.பெண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் 1ம் இடத்தைப்பெற்று தங்கப்பதக்கம் வென்று தேசிய மட்ட Junior  Athletic meet இற்கு தெரிவுசெய்யப்பட்டார்.
  • இலக்கம் 9 – 13 வரையிலான நிகழ்வுகள் திருஅ.ஜெகதீஸ்வரன் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வடகிழக்கு மாகாண ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள். (14 உட்பட).
  • திரு. அ. ஜெகதீஸ்வரன் விஞ்ஞான பாட ஆசிரியராக 1996 – 2010 வரை கடமை ஆற்றியவர். செல்வன். சொ. புஸ்பலிங்கம் ஆதித்தனுக்கு வழங்கிய பேட்டியில் தனது திறமையை இனங்கண்டு பயிற்றுவித்து, மேலதிக பயிற்சிக்குயாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பயிற்றுவிப்பாளர் திரு. செ. ரமணனிடம் தனது மோட்டார் சைக்கிளில் யாழ்மத்திய கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்கி சாதனை படைக்க வழி செய்தவர் திரு. அ. ஜெகதீஸ்வரன் என நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். திரு. அ. ஜெகதீஸ்வரன் வீரர்களுக்கு வழங்கிய பயிற்சியும் வழிகாட்டலும்1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் சோலையான் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற துணைநின்றதாக சோலையான் விளையாட்டுக் கழக தலைவர் திரு. மு .ஊ. கந்தசாமி குறிப்பிட்டுள்ளார். திரு. அ. ஜெகதீஸ்வரன் வாய்ப்புகளும் வசதிகளும் அரிதான போக்குவரத்து கஸ்டங்களுக்கு மத்தியில், மிக நெருக்கடியான கால கட்டத்தில் ஆற்றிய பணி என்றும் பாராட்டுக்குரியது.

உதைபந்தாட்டம்

செல்வன். கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் (சக்கலாவோடை) யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கழகத்தின் ஆதரவுடன் 1981இல் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போடடிகளில் யாழ் மாவட்டத்தில் முன்னணி
வீரராக தெரிவு செய்யப்பட்டு இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட அணி தெரிவிற்கான தெரிவு போட்டிகளில் பங்குபற்றியவர்.

கீழ் குறிப்பிடப்படும் வீரர்கள் யாழ்ப்பாண பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளில் இடம் பெற்றதோடு மாத்திரமல்லாமல் யாழ் மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் திகழ்ந்தார்கள்.

 திரு. அ. சுந்தரம்பிள்ளை (சிவன் கோவிலடி) யாழ்ப்பாண கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்.
 அமரர் திரு. தர்மரத்தினம் (புதுறோட்டு) யாழ்ப்பாணக் கல்லூரி உதைபந்தாட்ட வீரர், துடுப்பாட்ட அணித்தலைவர் துடுப்பாட்டத்தில் சாதனை ஏற்படுத்தியவர். கெப்டன். தர்மரத்தினம் ஆங்கிலேயர் நாட்டு இராணுவத்தில்  R.A.S.C Royal  Artillery  Service  இல் சேர்ந்து ஜேர்மன் நாட்டு படைகளுக்கு எதிரான யுத்தத்ில் பின்நாளில் பங்குபற்றியவர்.

 அமரர் வே.சிவசுப்பிரமணியம் (நடுத்தெரு) யாழ்ப்பாணக் கல்லூரி அணித் தலைவர்.

 அமரர் கனகரத்தினம் (புது றோட்டு) பரமேஸ்வரா கல்லூரி அணித் தலைவர்.

 அமரர் து.ஊ.அருளம்பலம் (தபாற் கந்தோரடி) யாழ்ப்பாண கல்லூரி உதைபந்தாட்ட வீரர் காரை இந்துக் கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் சேவையில் இருக்கும் போது அமரரான அருளம்பலத்தின் பூதவுடல் தாங்கிய குதிரை வண்டியை கல்லூரி உதைபந்தாட்ட அணிவீரர்களும், மாணவர்களும் மயானம் வரை இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.

 திரு. ஆ. இரத்தினகோபால் (புது றோட்டு;) 1945, 1946ஆம் ஆண்டுகளில் யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணிகளின் தலைவர். 1945ஆம் ஆண்டு யாழ் மாவட்டக் கல்லூரிகளில் திறமையான கால்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டவர்.

 திரு.யு.செல்வரத்தினம் (றுயுடுமுநுசுளுஇ மாப்பானவூரி) 1951ம் ஆண்டு காரைநகர் இந்துக்கல்லூரி உதைபந்தாட்ட அணித்தலைவர், துடுப்பாட்ட வீரர். காரை இந்துக்கல்லூரி உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர்.

 திரு நல்லையா பொன்னையா (மாப்பாணவூரி) சுண்ணாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி உதைபந்தாட்ட அணித் தலைவர்.

 திரு.சண்முகம் சிவசோதி (களபூமி) யாழ் மத்திய கல்லூரியின் துடுப்பாட்ட அணித்தலைவர். துடுப்பாட்டத்தில் நீண்டகாலமாக ஈடுபட்டு பிரபல்யமான துடுப்பாட்ட வீரர்.

 திரு. செல்வரத்தினம் இராதாகிருஸ்ணன் (மாப்பாணவூரி) 1964ம் ஆண்டுகளில் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி உதைபந்தாட்ட அணியின் சிறந்த கோல் காப்பாளர்.

 திரு.செல்வரத்தினம் இராதா கோபாலன் (மாப்பாணவூரி) 1975ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் சிறந்த கோல் காப்பாளர்.

 திரு. த. சிவகுமார் (கோவளம்) 1978இல் யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணித்; தலைவர் 1978, 1979 துடுப்பாட்ட, ஹொக்கி, அணிகளின் பிரதி தலைவர். 1976இல் இலங்கை பத்திரிகை சம்மேளனம் நாடாளவிய ரீதியில் நடாத்திய துடுப்பாட்ட போட்டியில் பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி அணி வீரர்; யாழ் இந்துக் கல்லூரி இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியுடன் விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

 1979ல் திரு.பாலசிங்கம் ஆனந்தகுமார் (அரசடிக்காடு) யாழ்ப்பாணக் கல்லூரியின் உதைபந்தாட்ட, துடுப்பாட்ட அணித்தலைவர்.

 1983ல் மயில்வாகனம் சிவராஜா (பலுகாடு) மகாஜானக் கல்லூரியின் உதைபந்தாட்ட அணித்தலைவர்.

 1986ல் கனகசபை சத்தியதாசன் (அல்லின் வீதி) மகாஜானக் கல்லூரியின் உதைபந்தாட்ட அணித்தலைவர்.

 திரு. இராஜதுரை இரவீந்திரன் (கோவளம்) 1992 – 1996 ஆண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்கும் காலத்தில் மொறட்டுவ பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணி வீரர்.

 திரு.தர்மலிங்கம் திருச்செல்வம் (திக்கரை) 1991 – 1994 ஆண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்கும் காலத்தில் மொறட்டுவ பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணித்தலைவர்.

 திரு.கந்தையா கமலேந்திரன் (திக்கரை) சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொழும்பு டி.எஸ் சேனநாயக்கா கல்லூயில் கல்வி பயின்றவர். 1997ல் நாடாளவிய ரீதியில்
நடைபெற்ற மைலோ வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றியதன் மூலம் கல்லூரியில் இருந்து இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவர். மலேசியாவில் நடைபெற்ற மலேசியா
பாடசாலைகள் அணியுடனும், இலங்கையில் நடைபெற்ற டூபாய் அணி;, கர்கிஸ்தான் அணி, மாலைதீவு மாணவர்கள் இலங்கையில் கற்கும் றோயல் சர்வதேச பாடசாலை அணி, லண்டன் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சர்வதேச பாடசாலை அணிகளுடன் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட அணி சார்பாக போட்டிகளில் பங்குபற்றியவர்.
உதைபந்தாட்டத்தில் தன்னை பயிற்றுவித்த ஆசிரியர் திரு. தம்பிராஜா சிவபாலனின் அனுசரனையுடனும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவியுடனும் காரைநகரில் உதைபந்தாட்டத்தை மேன்மைப்படுத்த திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய
திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

 திரு. க. சத்தியபாலன் (அல்லின் வீதி) மகாஜனக் கல்லூரி, சோலையான் விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட அணிவீரர். 2007இலிருந்து வடமாகாண கல்விப் பணிமனை உடற்கல்வி உதவிப் கல்விப் பணிப்பளாராக கடமையாற்றுகின்றார். விளையாட்டுத் துறை ரசிகர்கள், ஆர்வலர்கள் நல்கிய பங்களிப்பு விளையாட்டுத் துறை விருத்திக்கு ஒரு காரணமாகும். உதைபந்தாட்டப் போட்டிகளை ரசிப்பதற்கு ரசிகர் கூட்டமே இருந்தது. உதைபந்தாட்டப் போட்டிகளின் பின்னர் வீரர்களுக்கு நன்றி கூறுவதும் பாரட்டுவதும் பண்பாக இருந்தன. இன்றும் பலர் கடந்த கால விளையாட்டு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாடும் சம்பவங்களும் உண்டு. இவ்வழக்கொழிந்து முகந்தெரியாத விளையாட்டு வீரர்களின் நிகழ்வுகளை தொலைக்
காட்சியில் பார்ப்பதை வழக்காக்கியுள்ளோம்.

“HISTORY   REPEATS” வரலாறு மீள் எழும் என வாக்கியத்திற்கு அமைவாக கடந்த சென்ற பொற்காலத்தை எதிர் காலத்தில்உருவாக்க வரலாறு வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.

 A sound mind in a sound body


நான் அறிந்தவற்றையும், விளையாட்டில் ஈடுபட்டுள்ளோர், அக்கறை உள்ள ஆர்வலர்கள், காரைநகர் தொடர்பானஆவணங்கள் மூலம் பெற்ற தகவல்களையும் கொண்டு கட்டுரை வரையப்பட்டுள்ளது. கட்டுரையை ஆக்க தகவல்களை வழங்
கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். நீக்கப்பட வேண்டியவை, சேர்க்கப்பட வேண்டியவை நிறைய இருக்கலாம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை எதிர்பார்கின்றேன். தவறுகள் இருப்பின் தயவுடன் பொறுத்து அருள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நிறைவுகின்றேன்.

HAVE A PICTURE BEFORE YOU HAVE A PALACE

கட்டுரையாளர் பற்றி:

திரு. எஸ்.கே சதாசிவம் காரை இந்துக் கல்லூரியினதும் காரை விளையாட்டுக் கழகத்தினதும் கோல் காப்பாளர்; என்ற நிலையில் பலருக்கு அறிமுகமானவர். கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளின் பயிற்றுவிப்பாளர். 1977 தொடக்கம் 1991 வரையிலான காலப்பகுதியில் காரை விளையாட்டுக் கழகத்தை ஓர் உன்னத நிலையில் இயக்கியவர். யாழ் மாவட்ட வடகிழக்கு மாகாண மெய்வல்லுனர் உடற்பயிற்சி போட்டிகளை நடாத்துவதில் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1991ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது காரைநகர் பாடசாலைகளை காரைநகருக்கு வெளியே இயங்கச் செய்வதிலும் மிகவும் நெருக்கடியான 1999 முதல் 2002 வரையிலான காலப்பகுதியில் பரீட்சைத் திணைக்கள பரீட்சைகளையும் ஏனைய பரீட்சைகளையும்அனைத்து கல்விச் செயற்பாடுகளையும் வன்னி மாவட்டத்தில் சுமுகமாக நடைபெற வெற்றிகரமாக செயற்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவலர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகத்தின் (German Technical Cooperation GTZ ) வடகிழக்குமாகாண செயற்றிட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக கடமையாற்றுகின்றார்.

தீசன் திரவியநாதன்

'எனது ஊர் காரைநகர்"
கனடாவில் வெளியாகும் காலாண்டு
சஞ்சிகை உங்கள் வீட்டிற்கும்
இலவசமாக வந்தடையும். எதுவித
தயக்கமும்இன்றி உடனடியாக
அழையுங்கள்
416 821 8390

உங்கள் விலாசம் அல்லது
தொலைபேசி இலக்கத்தை
மின்அஞ்சலில் அனுப்பவும்.
உங்களுடன் தொடர்பு கொள்கின்றோம்.
theesan@karainews.com
நன்றி!

More From Author

காரைநகரும் விளையாட்டுத் துறையும் – பகுதி 1

இதழ் 23 – எனது ஊர் காரைநகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *